fbpx

வேலை தேடும் பெண்களே உஷார்..!! பாலியல் தொழிலில் சிக்க வைக்கும் கும்பல்..!! சென்னையில் பரபரப்பு சம்பவம்..!!

சென்னைக்கு வேலை தேடி வரும் இளம்பெண்களை ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவது தொடர் கதையாக இருந்து வருகிறது. அதேபோல், ஸ்பா என்ற பெயரில் விபச்சாரம் செய்து வருகின்றனர். இதனை தடுக்கும் நோக்கில் விபச்சார தடுப்பு போலீசார் அவ்வப்போது சோதனையில் ஈடுபட்டு கைது நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னை விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள ஏரோ பியூட்டி சலூன் அண்ட் ஸ்பா சென்டரில் இரவு நேரங்களில் அதிக எண்ணிக்கையில் இளைஞர்கள் வந்து செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அந்த இடத்தை போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்போது, அங்கு பாலியல் தொழில் நடப்பது உறுதியானது. 

இதனையடுத்து, அந்த ஸ்பா சென்டரில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய சாரதா (39) என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். அந்த பெண்ணிடம் இருந்து பாலியல் தொழிலுக்கு பயன்படுத்தி வந்த செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், பாலியல் தொழிலில் ஈடுபடுத்த வைத்திருந்த 2 பெண்களையும் காவல்துறையினரால் மீட்கப்பட்டு அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

வாடிக்கையாளர்களின் பணத்தை வங்கியில் டெபாசிட் செய்யாமல் மோசடி செய்த வங்கி மேலாளர் அதிரடி கைது…..! வேலூர் போலீஸ் நடவடிக்கை…..!

Mon Mar 20 , 2023
வேலூர் மாவட்டம் காட்பாடி காந்தி நகர் பகுதியில் இருக்கின்ற பாரத ஸ்டேட் வங்கியின் ராஸ்மிக் கல்வி கடன் பிரிவில் உதவி மேலாளராக யோகேஸ்வர பாண்டியன் என்பவர் பணியாற்றி வருகிறார் சூழ்நிலையில் கல்வி கடன் காப்பீட்டுத் தொகை 34,10,622 ரூபாயை வங்கி கணக்கில் செலுத்தாமல் மோசடி செய்ததாக எஸ்பிஐ வங்கியின் முதன்மை மேளாளர் சிவகுமார் அவர் இவர் மீது புகார் வழங்கினார் இந்த புகாரை அடிப்படையாக கொண்டு யோகேஸ்வர பாண்டியனை கைது […]
எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் நியூஸ்..!! இனி ஒரே ஒரு மெசேஜ் செய்தால் போதும்..!!

You May Like