fbpx

காப்பீடு நிறுவனத்தில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்பு..!! மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

இந்திய அரசின் பொதுக் காப்பீட்டு நிறுவனமான யுனைட்டெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் (United India Insurance) பல்வேறு காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 300 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

காலியிட விவரங்கள் : 300 உதவியாளர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. காலியிடங்கள் எண்ணிக்கை தற்காலிகமானது தான் என்றும், நிர்வாக காரணங்களினால் அதிகரிக்கவோ, குறையவோ கூடும்.

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், விண்ணப்பிக்க உள்ள உள்ளூர்/பிராந்திய மொழியில் பேசவும், படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு, பதவி முன் அனுபவம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை தேர்வு அறிவிப்பில் (ரெக்ரூட்மெண்ட் நோட்டிஸ்) தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் ரெக்ரூட்மெண்ட் நோட்டிசை பதிவிறக்கம் செய்து படிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

சம்பளம் : ஆரம்ப நிலை ஊதியமாக மாதம் ஒன்றுக்கு ரூ.37,000 வழங்கப்படும்.

வயது வரம்பு : இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், 30.09.2023 அன்று 21- 30 க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.

இடஒதுக்கீடு : இப்பதவிகளுக்கு, இந்திய அரசால் பின்பற்றப்படும் இடஒதுக்கீடு முறை பொருந்தும். எனவே, விண்ணப்பதாரர்கள் தகுந்த ஆவணங்களை சமர்ப்பித்து பயன்பெறலாம். மாற்றுத் திறனாளிகளுக்கான 4% இடஒதுக்கீடு முறையும் பின்பற்றப்படும். நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் 3 ஆண்டுகள் வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றத் திறனாளிகள் 10 ஆண்டுகள் வரை சலுகை பெறலாம்.

முக்கியமான நாட்கள் : இந்தப் பணிக்கான விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகின்றன. ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை எதிர்வரும் 2024 ஜனவரி 16ஆம் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும். எழுத்துத் தேர்வின் அடிப்படையில் இறுதித் தேர்வு பட்டியல் தயாரிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம் : விண்ணப்பக் கட்டணம் ரூ.1,000 ஆகும். பட்டியல்/ பழங்குடியினர் / மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் விண்ணப்பக் கட்டணமாக ரூ. 250 செலுத்த வேண்டும்.

தகுதி நிபந்தனைகள், ஆன்லைன் விண்ணப்ப படிவம் நிரப்புவதற்கான நடைமுறை, ஆள்சேர்ப்பு, நடைமுறை, தேர்வு மற்றும் சம்பளம் & அலவன்ஸ்கள் முதலியன பற்றிய விரிவான தகவலுக்கு uiic.co.in ஆள்சேர்ப்பு அறிவிப்பை பதிவிறக்கம் செய்து படிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Chella

Next Post

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு!… நீதிமன்றம் அதிரடி!

Fri Dec 15 , 2023
லஞ்சம் வாங்கி கைதான அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு டிசம்பர் 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல்லில் அரசு மருத்துவர் சுரேஷ்பாபுவிடம் பெற்ற லஞ்சப் பணத்துடன் கைது செய்யப்பட்ட அமலாக்கத் துறை அதிகாரி அன்கித் திவாரி கடந்த 1 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு […]

You May Like