தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி துறை மற்றும் ஊராட்சி துறை சார்பாக வேலை வாய்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றது. இந்த அறிவிப்பின்படி திருவாரூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் இரண்டு இடங்களை நிரப்புவதற்கான தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிப்பவர்கள் எட்டாவது வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. மேலும் இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது முதல் 34 வயதிற்குள் இருக்க வேண்டும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 10.03.2023 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த வேலை வாய்ப்பிற்காக விண்ணப்பித்தவர்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ஊதியமாக மாதம் ஒன்றிற்கு ரூபாய் 15,700- 50,000 ரூபாய் வரை சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்பிற்காக விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களது விண்ணப்பங்களை இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள முறைப்படி பூர்த்தி செய்து மார்ச் மாதம் பத்தாம் தேதிக்குள் அஞ்சல் மூலமாக ஆணையர் ஊராட்சி ஒன்றியம் திருவாரூர் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இந்த வேலை வாய்ப்பினை பற்றி பிற தகவல்களை அறிய truvarur.nic.in என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்