fbpx

வட்டார கல்வி அலுவலர் காலியிடங்களுக்கு வேலை!… இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்! TRB வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

33 வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 33 வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் நாளை முதல் ஜூலை 5 வரை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. https://trb.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்த காலியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு வரும் செப்டம்பர் 10-ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த தேர்வு தேதி தற்காலிகமானது என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றுமுதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி : 05.07.2023 ஆகும்.

Kokila

Next Post

போராட்டத்தை கைவிடவில்லை!... சாக்‌ஷி மாலிக், பஜ்ரங் புனியா ட்வீட்!

Tue Jun 6 , 2023
பாலியல் புகார் தொடர்பான இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவருக்கு எதிரான போராட்டத்தை கைவிடவில்லை என்று சாக்ஷி மாலிக் மற்றும் பஜ்ரங் புனியா தெரிவித்துள்ளனர். பாஜக எம்.பி.யும், இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவருமான பிரிஜ் பூஷண் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தனர். அவரை கைது செய்ய வலியுறுத்தி மல்யுத்த வீரர் மற்றும் வீராங்கனைகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் தங்களின் பதக்கங்களை கங்கையில் வீசவும் அவர்கள் முடிவு […]

You May Like