fbpx

சென்னையில் பிரபல ஐடி நிறுவனத்தில் கொட்டிக் கிடக்கும் வேலை..!! சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

சென்னையில் இயங்கி வரும் பிரபரல ஐடி நிறுவனத்தில் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

சென்னையில் பல ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் ஒன்று தான் ப்ரோபல் (Propel). தற்போது இந்த நிறுவனத்தில், காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போதைய அறிவிப்பின்படி, குவாலிட்டி இன்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். இப்பணிக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி அல்லது அதற்கு தொடர்புடைய துறையில் டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும், தொடர்புடைய துறையில் பூஜ்ஜியம் முதல் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பம் செய்வோர் சாப்ட்வேர் சர்வீஸ் பிரிவில் குவாலிட்டி இன்ஜினியராக 2 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டிருந்தால், கூடுதல் சிறப்பு. மாறாக பணி அனுபவமின்றி, வேலைக்கான திறமை கொண்டிருந்தாலும் விண்ணப்பிக்கலாம். இந்தப் பணிக்கான மாத சம்பளம் பற்றிய விவரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஆனாலும் கூட அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து நல்ல சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் பணியமர்த்தப்படுவார்கள். மேலும், இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் அறிவிக்கப்படவில்லை. இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் முடிந்தவரை Propel நிறுவனத்தின் இணையதளம் சென்று சீக்கிரமாக விண்ணப்பம் செய்வது நல்லது.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பிக்க https://talent.propelinc.com/jobs/Careers/26698000070584591/Fresher-Quality-Engineer?source=CareerSite என்ற இணையதளத்தை பார்வையிடவும்.

Read More : ஆச்சரியம்!. மனிதர்களைப் போலவே, நட்சத்திரங்களும் தும்முகின்றன!. அவை எப்போது தும்முகின்றன?

English Summary

IT company operating in Chennai is going to fill vacancies. Eligible and willing candidates can apply for this job.

Chella

Next Post

ஆடு மேய்க்க சென்ற மருமகள் கள்ளக்காதலனுடன் உல்லாசம்..!! தேடிச் சென்ற மாமியாருக்கு நேர்ந்த சோகம்..!!

Tue Jun 25 , 2024
The incident of beating the mother-in-law to death along with the forger and burning the daughter-in-law has caused a shock in Krishnagiri.

You May Like