fbpx

டிசம்பர் 20-ம் தேதி வரை இலங்கை – இந்தியா இடையே கடற்படைக் கூட்டுப்பயிற்சி…!

இலங்கை-இந்தியா இடையேயான கடற்படைக் கூட்டுப்பயிற்சி இன்று முதல் 20 வரை விசாகப்பட்டினத்தில் கிழக்கு கடற்படை சார்பில் நடைபெறவுள்ளது.

இலங்கை-இந்தியா இடையேயான கடற்படைக் கூட்டுப்பயிற்சி இன்று முதல் 20 வரை விசாகப்பட்டினத்தில் கிழக்கு கடற்படை சார்பில் நடைபெறவுள்ளது. இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ள பயிற்சியின் துறைமுக கட்டப் பயிற்சி டிசம்பர் 17 முதல் 18 வரையிலும், கடல் மார்க்கப் பயிற்சி டிசம்பர் 19 முதல் 20 வரையும் நடைபெறவுள்ளது. 2005-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட SLINEX எனப்படும் கடற்படை கூட்டுப்பயிற்சி பல ஆண்டுகளாக இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையிலான கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான இருதரப்பு கடற்படை பயிற்சிகளாகும்.

இந்திய கடற்படையின் ரோந்து கப்பலான ஐஎன்எஸ், இலங்கை கடற்படையின் ரோந்து கப்பலான எஸ்.எல்.என்.எஸ் சயுர ஆகியவை சிறப்பு படை குழுக்களுடன் பயிற்சியில் ஈடுபடுத்தப்படவுள்ளன.டிசம்பர் 19-ம் தேதி தொடங்கும் கடல் மார்க்கப் பயிற்சியில், சிறப்புப் படை நடவடிக்கைகள், துப்பாக்கிச்சுடுதல், தகவல் தொடர்பு பயிற்சிகள், கடல்சார் நடைமுறைகள் உள்ளிட்ட கூட்டுப் பயிற்சிகள் இடம்பெறும்.

English Summary

Joint naval exercise between Sri Lanka and India to continue till December 20

Vignesh

Next Post

உட்கார்ந்தே வேலை செய்பவரா நீங்கள்..? இந்த உணவுகளை சாப்பிட மறந்துறாதீங்க..!!

Tue Dec 17 , 2024
If you work sitting in one place for 8 to 10 hours straight, you will have a belly button around your stomach.

You May Like