பொதுவாக நாம் வெளிப்புற உடலை சோப்பு போட்டு சுத்தமாக வைத்திருப்போம். ஆனால், நமது உடலுக்குள் இருக்கும் உறுப்புகள் பற்றி நாம் சிந்திப்பதே இல்லை. ஆனால் அது முற்றிலும் தவறு, வெளிப்புற உடலை சுத்தமாக வைத்திருப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு உடலுக்குள் இருக்கும் குடலை சுத்தமாக வைத்திருப்பது அவசியம்.
ஆனால் தற்போது உள்ள காலகட்டத்தில், நாம் கண்ட துரித உணவுகளை அதிகமாக சாப்பிடுகிறோம். இளைஞர்கள் மட்டும் இல்லாமல், எல்லா வயதை சேர்ந்தவர்களுக்கும் துரித உணவுகள் மீது பேராசை வந்து விட்டது என்றே சொல்லலாம். இதனால் அவர்களின் வாழ்க்கை தரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. மேலும், இதனால் வயிறு தொடர்பான பல பிரச்சனைகள் ஏற்படுகின்றது.
இதற்கு முக்கிய காரணம், குடலில் தேங்கி இருக்கும் கழிவுகள் தான். நாம் நமது உடலில் உள்ள அழுக்கை சோப்பு பயன்படுத்தி சுத்தம் செய்வது போல், நமது குடலை கட்டாயம் சுத்தம் செய்ய வேண்டும். அந்த வகையில், குடலை எவ்வாறு இயற்கையான முறையில் சுத்தப்படுத்தலாம் என்று மருத்துவர் ஷர்மிகா விவரித்துள்ளார். அதனை தற்போது காணலாம்.
இதற்கு முதலில், இரண்டு பெரிய நெல்லிக்காய்களை எடுத்து அதில் இருக்கும் விதைகளை நீக்கி விட்டு சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். இத்துடன் ஒரு டேபிள் ஸ்பூன் தேன், ஒரு கைப்பிடி கறிவேப்பிலை மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைக்க வேண்டும். பின்னர், அரைத்த நெல்லிக்காயை நன்கு வடிகட்டி விடுங்கள்.
இப்போது வடிகட்டிய நெல்லிக்காய் சாறை, 50 முதல் 75 மில்லி லிட்டர் அளவிற்கு கிளாஸில் ஊற்றிக் குடித்து விடலாம். இந்த ஜூஸ் குடிப்பாதால், நமது வயிற்றில் இருக்கும் கழிவுகள் சோப்பு போட்டு கழுவியது போல் சுத்தமாகிவிடும். அவ்வாறு, வயிற்றுப் பகுதியில் இருந்து அனைத்து கழிவுகளும் முற்றிலுமாக வெளியேறிய பிறகு நீங்கள் தயிர் சாதம் அல்லது ஒரு கிளாஸ் மோர் எடுத்துக்கொள்ளலாம்.
இந்த ஜூஸ் குடிப்பதால் பல நன்மைகள் இருந்தாலும் கூட, லோ சுகர், கிட்னியில் கல் இருப்பவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் மாதவிடாய் பிரச்சனை இருப்பவர்கள் குடிப்பதை தவிர்ப்பது நல்லது. ஆனால் இந்த பிரச்சனை இல்லாதவர்கள் தாராளமாக இந்த ஜூசை குடித்து வயிற்றில் இருக்கும் கழிவுகளை நீக்கி விடலாம் என மருத்துவர் ஷர்மிகா தெரிவித்துள்ளார்.
Read more: சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க, 3 நேரம் என்ன சாப்பிடாலாம்?; விளக்கம் அளித்த நீரழிவு நிபுணர்..