தனியார் மற்றும் பொதுத் துறைகளில் உள்ள வங்கிகள் ஜூன் மாதத்தில் 12 நாட்களுக்கு மூடப்பட்டு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் மற்றும் பொதுத் துறைகளில் உள்ள வங்கிகள் ஜூன் மாதத்தில் 12 நாட்களுக்கு மூடப்படும். ஒவ்வொரு வருடத்தின் தொடக்கத்திலும், இந்திய ரிசர்வ் வங்கி ஒரு திட்டத்தை வகுக்கிறது, அதன்படி வங்கிகளுக்கு வருடாந்திர விடுப்புகள் விடபட்டு வருகிறது. இருப்பினும், வெவ்வேறு காரணத்தினால் வெவ்வேறு மாநிலங்கள் அல்லது நகரங்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள விடுமுறை பட்டியலில் ஞாயிறு மற்றும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் மட்டுமே அடங்கும். ஜூன் மாதத்தில் திருவிழாக்கள் கிடையாது. எனவே, பணி நிமித்தமாக உங்கள் வங்கிக்குச் செல்ல நீங்கள் திட்டமிட்டால், உங்கள் பிராந்தியத்தின்படி ஜூன் மாதத்தில் வங்கி விடுமுறையை உறுதிப்படுத்த உங்கள் உள்ளூர் கிளையைத் தொடர்பு கொள்ள வேண்டும். இந்த மாதத்தில், மொத்தம் 11 வங்கி விடுமுறைகள் இருந்தன.
ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 4, 2023- இந்த நாளில் நாடு முழுவதும் வங்கிகள் விடுமுறை.
ஜூன் 10, 2023- இரண்டாவது சனிக்கிழமையன்று இந்த நாள் வங்கிகளுக்கு விடுமுறை.
ஞாயிறு, ஜூன் 11, 2023- இந்த நாளில் நாடு முழுவதும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
வியாழன், ஜூன் 15, 2023- ராஜ சங்கராந்தி காரணமாக மிசோரம் மற்றும் ஒடிசாவில் வங்கிகள் விடுமுறை.
ஞாயிறு, ஜூன் 18, 2023- இந்த நாளில் நாடு முழுவதும் வங்கிகள் இயங்காது.
செவ்வாய்க்கிழமை, ஜூன் 20, 2023- ரத யாத்திரை காரணமாக ஒடிசாவில் வங்கிகளுக்கு விடுமுறை.
சனிக்கிழமை, ஜூன் 24, 2023- நான்காவது சனிக்கிழமை காரணமாக வங்கிகள் விடுமுறை.
ஞாயிறு, ஜூன் 25, 2023- இந்த நாளில் நாடு முழுவதும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
திங்கட்கிழமை, ஜூன் 26, 2023- கார்வி பூஜை காரணமாக திரிபுராவில் வங்கிகள் இயங்காது.
புதன்கிழமை, ஜூன் 28, 2023- ஈத்-உல்-அழா காரணமாக கேரளா, மகாராஷ்டிரா, ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் வங்கிகள் விடுமுறை.
வியாழன், ஜூன் 29, 2023- ஈத்-உல்-அழாவை முன்னிட்டு மற்ற மாநிலங்களில் வங்கிகள் விடுமுறை.
வெள்ளிக்கிழமை, ஜூன் 30, 2023- ஈத்-உல்-அழா அன்று மிசோரம், ஒடிசாவில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.