fbpx

இளநிலை நீட் தேர்வு..!! விண்ணப்பிப்பது எப்படி தெரியுமா..? இதை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

நாட்டில் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு குறித்த அறிவிப்பை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளமான neet.nta.nic.in -க்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். இந்த தேர்வுக்கான விண்ணப்ப பதிவு மார்ச் 6ஆம் தேதி தொடங்கியுள்ள நிலையில், ஏப்ரல் 6ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க பொதுப்பிரிவு மாணவர்களுக்கு ரூ. 1700, ஓபிசி மற்றும் EWS பிரிவு மாணவர்களுக்கு ரூ. 1600, SC, ST, PWD பிரிவு மாணவர்கள் / மூன்றாம் பாலின மாணவர்கள் ஆகியோருக்கு ரூ.1000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இளநிலை நீட் தேர்வு மே மாதம் 7ஆம் தேதி மதியம் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடைபெறும் நிலையில், நீட் தேர்வுக்கு எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம். அதற்கு முதலில் நீட் தேர்வு இணையதளத்திற்குள் neet.nta.nic.in சென்று ரெஜிஸ்ட்ரேஷன் என்ற பகுதியில் கிளிக் செய்ய வேண்டும். நீங்கள் முதல்முறையாக நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பவராக இருந்தால் உங்களுடைய விவரங்களை பதிவு செய்துவிட்டு உங்களுடைய பதிவெண் மற்றும் பாஸ்வேர்டை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு லாகின் பகுதியில் உங்களுடைய பதிவெண் மற்றும் பாஸ்வேர்டை உள்ளீடு செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். மேலும், அதில் கேட்கப்பட்டிருக்கும் சான்றிதழ்களையும் இணைக்க வேண்டும். விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்த பிறகு விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி விட்டு சமிட் கொடுத்தால் உங்களுடைய இமெயில் முகவரிக்கு விண்ணப்பம் உறுதியான தகவல் வந்துவிடும். மேலும் இளநிலை நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், மலையாளம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

நடு ராத்திரியில் கள்ளக்காதலியின் வீட்டிற்குள் புகுந்த பஸ் டிரைவர்..!! கதவை உடைத்து சரமாரியாக தாக்கிய கும்பல்..!!

Wed Mar 8 , 2023
கேரள மாநிலம் திருச்சூர் அருகே திருவாணிக்காவு பகுதியை சேர்ந்தவர் முகம்மது சஹர் (32). இவர் தனியார் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த திருமணமான ஒரு இளம்பெண்ணுடன் முகம்மதுவுக்கு நெருக்கம் ஏற்பட்டது. அந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு, இளம்பெண்ணின் வீட்டுக்கு நள்ளிரவில் முகம்மது சஹர் சென்றுள்ளார். இதையறிந்த அந்த பகுதியை […]

You May Like