Gas Cylinder: நமது நாட்டில் தற்போது கேஸ் சிலிண்டர் வாங்குவதில் சில விதிகளை அரசு விதித்துள்ளது . அதாவது கடந்த சில நாட்களுக்கு முன்பு LPG எரிவாயு வைத்துள்ளவர்கள் கண்டிப்பாக அவர்களின் எரிவாயு இணைப்புடன் ” ஆதார் “எண்ணை பதிவு செய்திருக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி இருந்தது. ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே உங்களுக்கு அரசிடம் இருந்து வரும் மானியங்கள் கிடைக்கும் என்று அறிவித்திருந்தது.
அதன் அடிப்படையில் மத்திய அரசு நுகர்வோரின் பாதுகாப்புகளை தீவிரப்படுத்தி வருகிறது. அதாவது, இனி வரும் காலங்களில் வீட்டிற்கு சிலிண்டரை டெலிவரி செய்யும் நபர் நுகர்வோரின் ” பயோமெட்ரிக் சான்றிதழ்களை” சோதனை செய்து ஆதார் விவரங்கள் நுகர்வோர்களுடையதா என்பதை சோதனை செய்வார். மேலும் சிலிண்டர் வாங்கும் நுகர்வோர் ” ஆதார் கேஒய்சி ” இல்லாமல் சிலிண்டர் வாங்க முடியாது என்றும் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்திருந்தது.
ஆதலால் மக்கள் அனைவரும் கண்டிப்பாக எரிவாயு இணைப்புடன் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இல்லையென்றால் அரசிடம் இருந்து எந்த வித மானியங்களும் உங்களுக்கு கிடைக்காது என்று அறிவித்துள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பு வைத்திருப்பவர்கள் இரண்டு வாரங்களில் தங்களது கேஸ் ஏஜென்சிக்கு சென்று கேஒய்சி விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் அறிவித்திருந்தது.
அதன்படி பாரத் கேஸ், இண்டேன், ஐஓசி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் கேஸ் இணைப்பு பெற்ற வாடிக்கையாளர்கள் உண்மைத் தன்மையை சரிபார்ப்பதற்காக கேஒய்சி பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. மேலும் கேஸ் ஏஜென்சிக்கு சென்று ஆதார் எண் மற்றும் கைரேகை பதிவு செய்துவிட வேண்டும் என்றும் இல்லாவிட்டால் சமையல் எரிவாயு இணைப்பு ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஏஜென்சிக்கு வர முடியாத மூத்த குடிமக்களுக்கு டெலிவரி ஊழியர்கள் வீட்டிற்கு சென்று செல்போன் செயலி மூலம் முகப்பதிவு செய்ய வேண்டும் என்றும் கேஸ் ஏஜென்சிகள் அறிவித்திருந்தன. கடந்த மே 30ஆம்தேதிக்குள் ஆதார் மற்றும் கைரேகை வைக்காவிட்டால் சமையல் எரிவாயு இணைப்பு ரத்தாகும் என செல்போன் மூலம் குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, ஆதார் கேஒய்சி இணைப்புக்கு கடந்த ஜூலை 27ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. இணைக்கவில்லை என்றால், கடந்த ஜூலை 27ம் தேதிக்குள் இணைத்துவிடுங்கள். இல்லாவிட்டால் சிலிண்டர் இணைப்பு ரத்து செய்யப்படும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தற்போது நவம்பர் 30ம் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி சமையல் எரிவாயு இணைப்பு வைத்திருப்பவர்கள் தங்களது கேஸ் ஏஜென்சிக்கு சென்று ஆதார் உள்ளிட்ட கேஒய்சி விவரங்களை இணைக்கவில்லை என்றால், சிலிண்டர் இணைப்பு நவம்பர் 30ம் தேதிக்கு பிறகு முடக்கப்பட வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.