யூ.டியூப் சேனல் தனது மகள் குறித்து அவதூறு பரப்புவதாக கள்ளகுறிச்சி மாணவி ஸ்ரீமதியின் தாயார் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த மாணவி ஸ்ரீமதியின் தாயார் சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அம்மனுவில் தனது குடும்பத்தின் மீதும் இறந்த தனது மகள் மீதும் யூடியூப் நிறுவனம் ஒன்று அவதூறு செய்திகளை பரப்புவதாக குறிப்பிட்டு இருந்தார். உண்மையை மறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த யூடியூப் சேனல் தவறான செய்திகளை பரப்புவதாகவும் சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் அளித்த புகார்மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த சேனல் மீது தக்க நடிவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பதிவேற்றம் செய்த அனைத்து வீடியோக்களையும் நீக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.
பின்னர் அவர் கூறுகையில், ’’ இவர் அந்த நிர்வாகத்திற்கு ஆதரவு அளித்து உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்டு வருகின்றார். உண்மையை மறைக்க பல வீடியோக்கள் பதிவேற்றம் செய்துள்ளார். என்னைப் பற்றி அபாண்டமான தகவல்களை அவர் வெளியிட்டுள்ளார். தவறான , பொய்யான தகவலை அளிக்கின்றார். மாணவியின் தந்தை யார் ? G ? என ஒளிபரப்பியுள்ளார். எனது கணவர் பெயர் கணேசனாம் , நான் அவரை விவகரத்து செய்திருக்கலாம் அல்லது அவரை கொலை செய்து இருக்கலாம் ஏதாவது அவரை செய்திருக்கலாம். எனது மகள் ஸ்ரீமதிக்கு 9 வது படிக்கும் போதுவரை ஜி இனிஷியலாக இருந்துள்ளதாம் . 10வது படிக்கும் போது ஆர் என மாற்றியதாக தகவல் வெளியிட்டுள்ளனர். என்னை தரக்குறைவாகவும் இழிவுபடுத்தும் நோக்கிலும் செயல்பட்டு வருகின்றனர். ஏற்கனவே மகள் இறந்த துக்கத்தில் உள்ளோம். இவர் மீது நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்ய வேண்டும். அவர் வெளியிட்ட வீடியோக்களை நீக்க வேண்டும். ’’ என்றார்…
மேலும் அவர் சிறு வயதில் ஸ்ரீமதிக்கு காதணி விழா நடத்திய பத்திரிகை , அவரது திருமணப் புகைப்படம் இவற்றை காண்பிடித்து அனைத்திலும் ஆர் தான் உள்ளது இதற்கான ஆதாரங்கள் இங்கே என காண்பித்தார்.