fbpx

“இந்தியாவின் முதல் பிரதமர் நேதாஜி” – சர்ச்சையை ஏற்படுத்திய கங்கனா!

இந்தியாவின் முதல் பிரதமர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்” என்று தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடிகையும் பாஜக வேட்பாளருமான கங்கனா ரனாவத் பேசியது, சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இமாச்சல் பிரதேசத்தின் மண்டி தொகுதி வேட்பாளராக பாஜக சார்பில் களமிறங்கியுள்ளார் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத். அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதிலிருந்து காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். தொடர்ந்து சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் அவர், அண்மையில் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். 

அப்போது பேசிய கங்கனா, “சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் எங்கே போனார்….?” எனக் கேள்வி எழுப்பினார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோவை காங்கிரஸ் தலைவர் பி.வி ஸ்ரீனிவாஸ், ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி ஸ்வாதி மாலிவால் மற்றும் பலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்திருக்கின்றனர்.

கங்கனாவுக்கு எதிராக இண்டியா கூட்டணி ஆதரவாளர்களும், அவருக்கு ஆதரவாக பாஜக ஆதரவாளர்களும் சமூக வலைதளங்களில் களமாடி வருகின்றனர். டெல்லி மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவரும் ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்பியுமான ஸ்வாதி மாலிவால் வீடியோவைப் பகிர்ந்து,“படித்த மற்றும் விவேகமானவர்களுக்கு வாக்களியுங்கள்” எனப் பதிவிட்டிருந்தார்.

Next Post

உங்கக்கிட்ட இந்த பழைய ரூபாய் நோட்டு இருக்கா..? அப்படினா நீங்களும் லட்சாதிபதி..!! செம அதிர்ஷ்டம் காத்திருக்கு..!!

Fri Apr 5 , 2024
பழைய ரூபாய் நோட்டுகள், நாணயங்கள் இருந்தால் போதும். லட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கும் என்று சோஷியல் மீடியாவில் அடிக்கடி செய்திகள் பரவி ஆச்சரியத்தை கிளப்பிக் கொண்டிருக்கின்றன. ரிசர்வ் வங்கி அடிக்கடி பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றம் செய்து புதிய ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்து வருகிறது. மற்றொருபக்கம், பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளுக்கான ஆன்லைன் சந்தைகளும் தற்போது பெருகிவிட்டன. உதாரணத்துக்கு, பழைய 1 ரூபாய் நாணயத்திற்கு இன்றும் மதிப்பு உள்ளது. […]

You May Like