fbpx

ஏன் கிரிக்கெட் விளையாட வர்றீங்க ? வாழைப்பழம் விற்று பிழைக்கலாம்ல… இந்திய வீரர்களை கபில் தேவ் சாடல்

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களை முன்னாள் கேப்டன் கபில்தேவ் கடும் விமர்சனம் செய்திருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொல்கத்தா : இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பலர் தங்களுக்கு அழுத்தம் ஏற்படுவதாக கூறி சில கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்காமல் ஓய்வெடுத்துக் கொள்கிறார்கள். மேலும், இதை கருத்தில்கொண்டு இந்திய கிரிக்கெட் வாரியம் சில தொடர்களில் வீரர்களுக்கு ஓய்வு அளித்து வருகிறது. இந்தநிலையில், கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய கபில்தேவ், இந்திய அணியின் மூத்த வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வு குறித்து கடுமையாக சாடியுள்ளார்.

வாழைப்பழ கடையோ, முட்டை கடையோ வைத்து பிழைப்பு நடத்தலாம்ல…

அதில், கடந்த சில நாட்களாகவே நான் அதிகம் கேட்கும் வார்த்தை அழுத்தம் என தெரிவித்துள்ள அவர், சில முன்ணனி வீரர்கள் ஐபிஎல் விளையாடுவதால் அதிக அழுத்தம் ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர். என்றும், அவ்வாறு அழுத்தம் இருக்கும் பட்சத்தில் ஏன் விளையாட வருகிறீர்கள் எனவும், நாட்டுக்காக விளையாடும் போது எப்படி அழுத்தமாக உணருகிறீர்கள் என வினவியுள்ளார். வேலை செய்ய விரும்பமில்லை என்றால், வாழைப்பழ கடையோ அல்லது முட்டை கடை வைத்து பிழைப்பு நடத்தலாம் எனவும், 100 கோடி பேர் உள்ள நாட்டில், 20 பேர் விளையாடுவது எவ்வளவு ஒரு பெருமைக்குரிய விஷயம், வேலையை முழு மனதுடன் செய்தால் அனைத்தும் எளிதாகிவிடும் என தெரிவித்தார்.

Kokila

Next Post

’எனது மகனை மத்திய அமைச்சர் ஆகவிடாமல் தடுத்தது எடப்பாடி பழனிசாமிதான்’..!! கொந்தளிக்கும் ஓபிஎஸ்..!!

Wed Dec 21 , 2022
’தைரியம் இருந்தால் தனிக் கட்சி தொடங்கி பாருங்கள்’ என எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் சவால் விடுத்துள்ளார். சென்னையில் தனது ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், ”ஜெயலலிதாவுக்கு நிரந்தர பொதுச்செயலாளர் என்ற அங்கீகாரம் வழங்கப்பட்டதை ரத்து செய்பவர்களை இந்த நாடு மன்னிக்குமா? எப்போதுமே அதிமுகவின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான் என்று கூறினார். எடப்பாடி பழனிசாமியிடம் மாவட்ட செயலாளர்கள் இருக்கிறார்கள் என்றால் […]
’எனது மகனை மத்திய அமைச்சர் ஆகவிடாமல் தடுத்தது எடப்பாடி பழனிசாமிதான்’..!! கொந்தளிக்கும் ஓபிஎஸ்..!!

You May Like