கர்நாடக மாநிலத்தில் இருக்கும் பிரபல மடங்களில் ஒன்று முருக மடம். சித்ரதுர்காவில் இருக்கும் இந்த மடத்தின் மடாதிபதியாக இருப்பவர் சிவமூா்த்தி முருகா சரணரு. முருக மடத்தின் சார்பில் தங்கும் விடுதி வசதியுடன் கூடிய பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த பள்ளியில் தங்கி படித்து வந்த பத்தாம் வகுப்பு மாணவிகள் இரண்டு பேரை மடாதிபதி சிவமூா்த்தி முருகா சரணரு, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் பின் செப்டம்பர் மாதம் துறவி சிவமூர்த்தி சரணரு கைது செய்யப்பட்டார். தற்போது அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
போலீசார் வழக்குப் பதிவு செய்த இரு தினங்களுக்கு பின், புகார் அளித்த இரு சிறுமியர்களிடம் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. சிறுமியரின் பிறப்புறுப்புகளை சோதித்ததில், அவர்கள் கன்னித் தன்மை இழந்ததற்கான அடையாளம் தென்படவில்லை என, மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மருத்துவ அறிக்கை சாமியாருக்கு சாதகமாக வந்துள்ளதால் இந்த வழக்கு மேலும் சூடு பிடித்துள்ளது.