fbpx

ஆண் குழந்தைக்கு 10 லட்சம்.! 60 குழந்தைகள் கடத்தல்.! 8 தமிழர்கள் கைது.! பதற வைக்கும் புள்ளி விவரம்.!

கர்நாடகாவையே அதிர வைத்த 60 குழந்தைகள் கடத்தல் சம்பந்தமாக எட்டு தமிழர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் உண்மை சம்பவங்கள் வெளியாகி இருக்கின்றன.

கர்நாடக தலைநகரான பெங்களூர் நகரில் உள்ள ஆர் ஆர் நகரில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த நான்கு தமிழர்களை பிடித்து விசாரித்ததில் அவர்கள் குழந்தையை விற்பனை செய்ய வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் உண்மை சம்பவங்கள் வெளியாகி இருக்கின்றன.

இந்தக் கும்பல் குழந்தைகள் இல்லாத தம்பதிகளை பற்றிய தகவல் அறிந்து தமிழ்நாட்டில் இருந்து குழந்தைகளை கடத்தி வந்து கர்நாடகாவில் விற்பனை செய்தது தெரிய வந்திருக்கிறது. மேலும் தமிழகத்தைச் சேர்ந்த 4 பெண்களும் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். இந்த கும்பலுக்கு தலைவியாக ஈரோடு பகுதியைச் சேர்ந்த மகாலட்சுமி என்பவர் செயல்பட்டு வந்ததும் தெரிய வந்திருக்கிறது.

பிறந்து இருபது நாட்களுக்குள்ளான குழந்தைகளை 2 லட்சம் ரூபாய்க்கு வாங்கி 10 லட்சம் முதல் 20 லட்சம் ரூபாய் வரை கர்நாடகாவில் விற்பனை செய்துள்ளனர். மேலும் ஆண் குழந்தைகள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு என தனித்தனியாக ரேட் பிக்ஸ் செய்து விற்பனை செய்து இருப்பதும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. ஆண் குழந்தைகள் என்றால் 10 லட்சம் ரூபாயும் பெண் குழந்தைகள் என்றால் ஐந்து லட்ச ரூபாய்க்கும் விற்பனை செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக பெங்களூர் காவல் துறை தெரிவித்துள்ளது.

Next Post

வாலிபர்களுடன் குத்தாட்டம் போட்ட இளம்பெண்..!! ஊர் பஞ்சாயத்து வழங்கிய கொடூர தண்டனை..!!

Wed Nov 29 , 2023
பாகிஸ்தான் நாட்டின் கோ ஹிஸ்தான் பகுதியைச் சேர்ந்தவர் 18 வயது இளம்பெண். இவர், சில வாலிபர்களுடன் நடனம் ஆடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனை பார்த்த இவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து ஊர் பெரியவர்கள் நடத்திய பஞ்சாயத்தில் அந்த இளம்பெண்ணை கொலை செய்ய உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த இளம்பெண்ணின் பெற்றோரும் அவரை கவுரவ கொலை செய்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரியவந்துள்ளது. அவர்கள் […]

You May Like