அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான விடாமுயற்சி படம் கடந்த 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா கசாண்ட்ரா, ஆர்வ உள்ளிட்டோ நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பிரேக் டவுன் என்ற ஹாலிவுட் படத்தின் ரீமேக்காக உருவான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
விடாமுயற்சி படத்தை தொடர்ந்து அஜித்தின் குட் பேட் அக்லி படமும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.
இந்த படத்தை தொடர்ந்து அஜித்தின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ‘AK64’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
கடந்த சில வாரங்களாக, அஜித்தின் அடுத்த படத்தை இயக்கப் போவது யார் என்பது குறித்த தகவல் வெளியான வண்ணம் உள்ளது. முன்னதாக, மகாராஜா இயக்குனர் நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது.
கேஜிஎஃப் இயக்குனர் பிரசாந்த் நீல், விஷ்ணுவர்தன் மற்றும் வெங்கட் பிரபு போன்ற இயக்குனர்களின் பெயர்கள் கூட அடிபட்டன. இவர்களிடம் அஜித் கதை கேட்ட நிலையில் கார்த்திக் சுப்புராஜ் கூறிய கதை அஜித்திற்கு பிடித்து போனதாம். எனவே கார்த்திக் சுப்புராஜ் தான் அஜித்தின் AK64 படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் பணிகள் அக்டோபரில் தொடங்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மறுபுறம், இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் சூர்யா – பூஜா ஹெக்டேவை வைத்து ரெட்ரோ படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர், முதல் பாடல் ஆகியவை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. காதல் கலந்த ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள இந்த படம், மே 1 ஆம் தேதி பெரிய திரைகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : வைரலான Chhi Chhi Chhi Re Nani.. 30 ஆண்டுகள் கழித்து டிரெண்டிங்.. இந்த பாடலின் தமிழ் அர்த்தம் தெரியுமா..?