fbpx

திடீரென ரூட்டை மாற்றிய பிரதமர் மோடி!! வேஷ்டி, அங்கவஸ்திரத்துடன் பகவதி அம்மன் கோயிலில் தரிசனம்!!

வேஷ்டி, அங்கவஸ்திரம் அணிந்து வந்து கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார்.

விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் தியானம் மேற்கொள்வதற்காக 3 நாள் பயணமாக கன்னியாகுமரிக்கு வருகை தந்துள்ளார் பிரதமர் மோடி. ஒவ்வொரு மக்களவை தேர்தல் பிரசாரம் முடிவடைந்த பிறகு தியானம் மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார் பிரதமர் மோடி. அதன்படி கடந்த 2014ல் பிரதாப்கர், அதன்பிறகு உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் குகையில் தியானம் செய்தார்.
அதன்படி 7வது மற்றும் கடைசி கட்ட மக்களவை தேர்தல் பிரசாரம் முடிவடைந்த நிலையில் பிரதமர் மோடி தியானத்துக்காக கன்னியாகுமரி வந்துள்ளார். பிரதமர் மோடி கன்னியாகுமரியில் கடலுக்கு நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் தியானம் மேற்கொள்ள உள்ளார்

விமானத்தில் திருவனந்தபுரம் வந்த பிரதமர் மோடி அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டரில் கன்னியாகுமரி வந்தார். அதன்பிறகு அங்கிருந்து அவர் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு செல்வதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் பிரதமர் மோடி விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்வதற்கு முன்பு பகவதியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இதற்காக பாரம்பரிய முறையில் மேலாடை அணியாலம், உடலில் அங்கவஸ்திரம் மற்றும் வேஷ்டி மட்டும் அணிந்திருந்தார். பிரதமர் மோடி மேலாடை இன்றி அங்கவஸ்திரம் மற்றும் வேஷ்டி மட்டும் அணிந்து தரிசனம் செய்ததன் பின்னணியில் ஆகம விதிகள் உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது கன்னியாகுமரி இதற்கு முன்பு பழைய திருவிதாங்கூர் கொச்சி சமஸ்தானத்தின் கீழ் இருந்தது. அந்த சமயத்தில் பகவதியம்மன் கோவிலில் கேரளாவின் ஆகம விதிகள் படி பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பொதுவாகவே இந்த பகவதியம்மன் கோயிலில் ஆண்கள் சட்டை, பனியன் அணிந்து தரிசனம் செய்ய அனுமதியில்லை. வேஷ்டி, பேண்ட் அணிந்து மட்டுமே தரிசனம் செய்ய வேண்டும் என்பது விதியாக உள்ளது. அதனை பின்பற்றி தான் பிரதமர் மோடி மேலாடை அணியாமல் வேஷ்டி அணிந்து உடலில் அங்கவஸ்திரத்தை போர்த்தி கொண்டு தரிசனம் செய்தார். கோயிலில் சாமி தரிசனம் செய்த பிரதமர் மோடிக்கு நிர்வாகம் சார்பில் அங்கவஸ்திரம் மற்றும் பகவதியம்மன் போட்டோ வழங்கப்பட்டது. அதன்பிறகு பிரதமர் மோடி படகில் கன்னியாகுமரி கடலுக்குள் உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு தியானத்துக்காக சென்றார்.

Read More: ஜம்மு-காஷ்மீரில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 21 பேர் பலி… 69 பேர் படுகாயம்…!

Baskar

Next Post

இனி உங்களுக்கு நெட்வொர்க் பிரச்சனையே வராது..!! இதை மட்டும் செய்யுங்க போதும்..!!

Fri May 31 , 2024
In some places the net is not available at all. In this post you can see the important things to do when the internet is not available in an urgent situation.

You May Like