fbpx

நடுக்கடலில் கருணாநிதி பேனா நினைவுச்சின்னம் – தமிழக அரசுக்கு சுற்றுலாத்துறை அமைச்சகம் கடிதம்..

கடலுக்கு நடுவில் கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னம் அமைப்பது குறித்து , தமிழக அரசிற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல்துறை கடிதம் அனுப்பியுள்ளது.

ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி நடைபெற்ற மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை சுட்டிக் காட்டி தமிழக பொதுப்பணித்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

போன நினைவுச் சின்னம் அமைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக்கு ஆற்வறிக்கையை தயாரிக்க தமிழக அரசுக்கு சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக்குழு அனுமதி வழங்கியுள்ளது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் இலக்கிய பணிகளைப் போற்றும் வகையில் மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்திற்கு அருகே கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி , மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்திலிருந்து 360 மீட்டர் தொலைவில் நடுக்கடலில் பேனா சிலை வைக்க அரசு திட்டமிட்டிருக்கிறது.

இந்த சிலை அமைந்துள்ள பகுதிக்குச் செல்ல கடற்கரையில் இருந்து சுமார் 650 மீட்டர் நீளத்துக்கு கண்ணாடியிலான மேம்பாலம் அமைக்கப்படும். இந்த பாலம் நிலத்தின் மீது 290மீட்டரர் உயரம் , கடலின் தீது 360 மீட்டர் உயரத்தில் அமையும் வகையில் கட்டப்படும். ரூ.81 கோடி செலவில் இந்த சிலை அமைக்கப்பட உள்ளது. ’’கலைஞரின் பேனா நினைவு சின்னம் ’’ என பெயரிட உள்ளது.

தமிழக அரசு சார்பில் ரூ.81 கோடி மதிப்பில் அமைக்கப்படும் நினைவுச் சின்னத்திற்கு தமிழக கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் ஏற்கனவே அனுமதி அளித்திருக்கின்றது. இந்நிலையில் மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என சுற்றுசூழல் துறை அமைச்சகத்திற்கு பொதுப்பணித்துறை கடிதம் அனுப்பியுள்ளது.

தமிழக அரசின் விண்ணப்பத்தை பரிசீலித்த மத்தி சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு பொதுமக்கள் கருத்து கேட்பு உள்பட பல்வேறு நிபந்தனைகளை விதித்ததோடு இதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை தயாரிக்கவும் அனுமதி வழங்கியுள்ளது. நிபந்தனைகள் மற்றும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை நான்கு ஆண்டுகளுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அக்கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Next Post

வெளிநாடு செல்பவர்கள் தமிழர் நலவாரியத்தில் பதிவு செய்வது கட்டாயம்…

Wed Oct 5 , 2022
தமிழகத்தில் இருந்து வெளிநாட்டிற்கு செல்பவர்கள் அனைவரும் , ’’ புலம்பெயர் தமிழர் நல வாரியத்தில் ’’ பதிவு செய்ய வேண்டும் என்பதை கட்டாயமாக்க வேண்டும் என்பதை தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. வெளிநாடுகளுக்கு வேலைக்காக செல்பவர்கள் அரசிடம் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டாலும் அதை யாரும் நடைமுறையில் செய்வதில்லை. ஒவ்வொருவரும் அரசிடம் எவ்வாறு பதிவு செய்வது என்பது பற்றி பார்க்கலாம்.. வெளிநாடுகளுக்கு வேலை விஷயமாக செல்பவர்கள் பல்வேறு சந்தர்ப்ப சூழலால் […]

You May Like