fbpx

மகனின் தலையில் அம்மிக் கல்லைப் போட்டு கொன்ற கொடூர தந்தை..! சண்டையில் தலையிட்டதால் சம்பவம்..!

பெற்ற மகன் என்றும் பாராமல் தலையில் அம்மிக் கல்லைப் போட்டு தந்தை கொலை செய்த சம்பவம் கடலூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் சிறுவத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி சுமதி. இந்த தம்பதிக்கு அர்ஜூனன் (14) என்ற மகனும் லதா, நந்தினி என்ற இரண்டு மகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று கணவன் குமார், மனைவி சுமதி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆத்திரத்தில் குமார் தனது மனைவி சுமதியை அடித்துள்ளார். இதைக் கண்ட அவரது மகன் அர்ஜூனன் ஏன் அம்மாவை அடிக்கிறாய் என தட்டி கேட்டுள்ளார். இதனால் தந்தை மகனுக்கு இடையே சண்டை வெடித்துள்ளது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த குமார் தான் பெற்ற மகன் என்றும் பாராமல் வீட்டிலிருந்த அம்மிக் கல்லை அர்ஜூனன் தலையில் போட்டு கொடூரமாக கொலை செய்துள்ளார்.

மகனின் தலையில் அம்மிக் கல்லைப் போட்டு கொன்ற கொடூர தந்தை..! சண்டையில் தலையிட்டதால் சம்பவம்..!

இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்து வந்த போலீசார், கொலை செய்யப்பட்ட அர்ஜூனனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தந்தை குமாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெற்ற மகன் என்றும் பாராமல் தலையில் அம்மிக் கல்லைப் போட்டு தந்தை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

அண்ணனை அடித்து விரட்டி... மழைக்கு ஒதுங்கிய சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

Tue Jul 19 , 2022
ஒடிசாவின் கியோஞ்சர் மாவட்டத்தை சேர்ந்த சிறுமி ஒருவர், தனது சகோதரருடன் தனது சகோதரியின் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது, அந்த சிறுமையும் அவரது சகோதரரும் பேருந்தில் இருந்து இறங்கும் போது அப்பகுதியில் கனமழை பெய்து கொண்டிருந்தது. உடனே அங்கு நின்று கொண்டிருந்த சில பேர், அவர்களிடம் அருகில் இருந்த பள்ளி கட்டிடத்தில் தங்கிவிட்டு, மழை நின்றவுடன் செல்லுங்கள் என்று அவர்கள் இருவரிடமும் கூறியுள்ளனர். இரவு நேரம் என்பதால், அவர்கள் கூறியபடி […]

You May Like