எர்ணாகுளம் போக்சோ நீதிமன்றம், தனது முன்னாள் பணிப்பெண்ணின் மகளான 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக போலி பழங்கால வியாபாரி மோன்சன் மாவுங்கலுக்கு ஆயுள் தண்டனை விதித்து சனிக்கிழமை தீர்ப்பளித்தது. மேலும் போக்சோ சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவருக்கு 5.25 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி கே சோமன் உத்தரவிட்டார்.

கேரளமாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தை சேர்ந்தவர் வியாபாரி மோன்சன்மாவுங்கல். இவரது வீட்டில் பணி செய்து வந்த நபரின் மகள் பள்ளியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில், அவர்களின் வறுமையை பயன்படுத்தி கல்வி கட்டணம் கட்டப் பணம் தருவதாக கூறி, சிறுமியை இரண்டு ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனைஅடுத்து அவர் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில், அந்த நபர் போக்சோசட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுசிறையில் அடைக்கப்பட்டார்.
போக்சோ சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட அவருக்கு 5.25 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி கே சோமன் உத்தரவிட்டார்.