கேரள மாநிலத்தில் பூங்குஞ்சு என்ற நபர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் மீனவர் தொழில் செய்து பிழைப்பு நடத்தி வந்த நிலையில், இவருக்கு வீடு கட்டியதற்காக ஒன்பது லட்சம் ரூபாய் கடன் இருந்தது.
எனவே அவர் கடன் வாங்கிய வங்கியில் இருந்து இவருடைய வீட்டை ஜப்தி செய்யப் போவதாக நோட்டீஸ் வந்து கொண்டே இருந்தது. இதனால், பூங்குஞ்சு மிகவும் மன உளைச்சலில் இருந்துள்ளார்.
பணத்திற்கு என்ன செய்வது என்று அவர் தெரியாமல் விழித்துக் கொண்டு மனம் உடைந்து காணப்பட்டு இருக்கிறார். இத்தகைய நிலையில், அவருக்கு லாட்டரி மூலம் 70 லட்சம் பரிசு விழுந்துள்ளது.
இதனால் அவர் இன்ப அதிர்ச்சிக்குள்ளாகி மகிழ்ச்சியில் திளைத்துள்ளார். அதை வங்கியில் சென்று தனக்கு விழுந்த பரிசு தொகையை பூங்குஞ்சு பெற்றுக்கொண்டு, தான் அந்த வங்கியில் பெற்றிருந்த கடனையும் திருப்பி செலுத்தியுள்ளார். அடுத்ததாக ஏதேனும் சிறு தொழில் துவங்க திட்டமிட்டு இருப்பதாக பூங்குஞ்சு செய்தியாள்களிடம் கூறியுள்ளார்.