fbpx

சோகம்…! கேரளா நிலச்சரிவு உயிரிழப்பு எண்ணிக்கை 125 ஆக உயர்வு…!

கேரளா நிலச்சரிவில் இதுவரை 125 பேர் உயிரிழந்துள்ளனர்.

கேரளா மற்றும் தமிழக எல்லைகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதில், கேரளா மாநிலம் வடக்கு கோழிக்கோடு பகுதியில் உள்ள விலாங்காடு மற்றும் மலையங்காடு பகுதிகளில் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் காணாமல் போயுள்ளார். மேலும், அப்பகுதியில் இருந்த பல்வேறு வீடுகள், பாலம் மற்றும் சாலைகள் சேதமடைந்துள்ளது.

மேலும் வயநாடு மேப்பாடி பகுதியில் உள்ள சூரல் மலை பகுதியில் பெய்த கனமழை காரணமாக மேப்பாடு முண்டக்கை மற்றும் சூரல்மலை என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டு குழந்தைகள், பெண்கள் உட்பட இதுவரையில் 80 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனவும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

நிலச்சரிவில் இதுவரை 125 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இன்றும், நாளையும் கேரளாவில் துக்கம் அனுசரிக்கப்படும் என கேரள அரசு தெரிவித்துள்ளனது. தற்போது தேசிய பாதுகாப்பு மீட்புப் படை (NDRF) வீரர்கள், மண் சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக, கோவை மாவட்டம் சூலூரில் இருந்து 2 ஹெலிகாப்டர்கள் மீட்புப் பணிகளுக்காகச் சென்றுள்ள நிலையில், கர்நாடக மாநிலத்தில் இருந்தும் ராணுவத்தினர் வயநாடு பகுதிக்கு விரைந்துள்ளனர்.

English Summary

Kerala landslide death toll rises to 125

Vignesh

Next Post

தொடரும் உயிரிழப்பு எண்ணிக்கை...! எம்.பி ராகுல் காந்தி கேரளா பயணம் திடீரென ரத்து...!

Wed Jul 31 , 2024
Rahul Gandhi's visit to Kerala has been canceled suddenly.

You May Like