fbpx

மருமகளை நிர்வாண பூஜைக்கு கட்டாயப்படுத்திய கொடுமை.. நரபலி சம்பவத்தை தொடர்ந்து கொடுமை.!

நோயை குணப்படுத்த நிர்வாண பூஜையை செய்யவேண்டும் என்று மருமகளை கட்டாயப்படுத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கும், அதே பகுதியை சேர்ந்த சத்யபாபு (36) என்பவருக்கும் 2017ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

சத்யபாபு குடும்பத்தினர் மூட நம்பிக்கைகளில் அதீத நம்பிக்கை கொண்டவர்களாக இருந்துள்ளனர். திருமணம் முடிந்த 2 மாதத்தில் அவர்களது வீட்டிற்கு சில மந்திரவாதிகள் வந்து சத்யபாபு வீட்டில் தீய சக்தி இருக்கிறது என்றும், அதனை விரைவில் கட்டுப்படுத்தி சரிபண்ண வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

அப்பெண்ணின் மாமியார் ஷைலஜா (60) மற்றும் கணவருக்கு நோய் இருப்பதாக கூறி , அதனை தொடர்ந்து குணப்படுத்த வீட்டிலுள்ள மருமகள் நிர்வாண பூஜை செய்யவேண்டும் என்றும் கூறியுள்ளனர். இவர்களும் அவர் அதை நம்பி, நோயை குணப்படுத்த நிர்வாண பூஜையை செய்தாக வேண்டும் என்று மருமகளை கட்டாயப்படுத்தியுள்ளனர். இதனால் மன வேதனையில் பதறிப்போன அந்த பெண், வீட்டை விட்டு வெளியேறினார்.

பிறகு தனது பெற்றோரின் உதவியோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தாலும் பல ஆண்டுகளாக அப்பெண்ணின் கணவர் மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அண்மையில் இரண்டு பெண்கள் நரபலி சம்பவத்தினால், மீண்டும் அந்த பெண் தனது புகார் குறித்து மீண்டும் குரலெழுப்பியுள்ளார். இப்போது சுமார் 5 ஆண்டுகளுக்கு பிறகு காவல்துறையினர் கணவர் சத்யபாபு மற்றும் மாமியார் ஷைலஜா மீது வழக்குப்பதிவு செய்து மாமியாரை கைது செய்துள்ளனர்.

கணவர் சத்யபாபு தலைமறைவாகி விட்டார், அதனை தொடர்ந்து இதற்கெல்லாம் காரணமாக கருதப்படும் மந்திரவாதி அப்துல் ஜப்பார் என்பவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Rupa

Next Post

படுக்கைக்கு அழைத்த முன்னாள் அமைச்சர்கள்..!! பதறவைத்த சொப்னா..!! பரபரப்பில் கேரளா..!!

Sun Oct 23 , 2022
முன்னாள் அமைச்சர்கள் என்னை படுக்கைக்கு அழைத்துள்ளார்கள் என்றும் எனது சுயசரிதையின் 2ஆம் பாகம், கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்றும் சொப்னா தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் அமீரக தூதரக பார்சல் மூலம் தங்கம் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட சொப்னா சமீபத்தில் ‘சதியின் பத்ம வியூகம்’ என்ற பெயரில் ஒரு சுயசரிதை எழுதினார். அதில், கேரள முதல்வர் பினராய் விஜயன், அவரது குடும்பத்தினர், ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர், சில முக்கிய […]
படுக்கைக்கு அழைத்த முன்னாள் அமைச்சர்கள்..!! பதறவைத்த சொப்னா..!! பரபரப்பில் கேரளா..!!

You May Like