fbpx

அசத்தல்…! 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மின்சார வாகனம்…! அதிரடி காட்டும் முதலமைச்சர்…!

கைனெடிக் எனர்ஜி (Kinetic Energy) நிறுவனம் மத்திய பிரதேசத்தில் மாநில அரசின் உதவியுடன் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 200 ஃப்ளக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வழங்கி உள்ளது.

நிலையான போக்குவரத்தை மேம்படுத்துதல் மற்றும் கல்வியின் சிறப்பை அங்கீகரிக்கும் முயற்சியில், மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான Kinetic Green Energy நிறுவனம் 200 மின்சார ஸ்கூட்டர்களை மத்தியப் பிரதேச அரசாங்கத்திடம் ஒப்படைத்துள்ளது. அந்த வாகனங்களை 12ம் வகுப்பு தேர்வில் சிறப்பாக செயல்பட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டது.

மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தகுதியான மாணவர்களுக்கு Kinetic Green Energy நிறுவனத்தின் வாகனங்களை நேரில் வழங்கினார். வாகனங்கள் யாருக்கு கொடுப்பது என்பதை மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தேர்வு செய்துள்ளனர்.

Kinetic Green Energy Flex என்பது நியோ-ரெட்ரோ வடிவமைப்புடன் கூடிய அதிவேக மின்சார ஸ்கூட்டர் ஆகும். இது பிரிக்கக்கூடிய 3.1 kWh பேட்டரிகளைப் பெறுகிறது மற்றும் ஒருமுறை சார்ஜ் செய்தால் 120 கிமீ தூரம் வரை செல்லும். இந்த EVயின் அதிகபட்ச வேகம் மணிக்கு 72 கி.மீ. மேலும், அலாய் ரிம்கள், சென்ட்ரல் பிரேக்கிங் சிஸ்டம், ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம், ஆண்டி-தெஃப்ட் அலாரம் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது.

Vignesh

Next Post

வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு…! வரும் செப்டம்பர் மாதத்தில் இத்தனை நாள் வங்கிகளுக்கு விடுமுறையா..! முழு விவரம்..

Sun Aug 27 , 2023
இந்தியாவில் செயல்பட்டு வரும் அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகின்றன. இதன் அடிப்படையில் ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்குமான வழிகாட்டு நெறிமுறைகளையும் வழங்கி வருகிறது. அத்துடன் வங்கிப் பணி மற்றும் விடுமுறை நாட்களையும் அறிவித்து வருகிறது. அதன் படி செப்டம்பர் மாதத்திற்கான விடுமுறை நாட்களை ரிசர்வ் வாங்கி அறிவித்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் வங்கிக் கிளைக்குச் செல்ல நீங்கள் திட்டமிட்டால், எந்தத் தொந்தரவும் […]

You May Like