fbpx

ஐபிஎல் தொடரிலிருந்து விலகுகிறார் கே.எல்.ராகுல்..!! லக்னோ அணியின் அடுத்த கேப்டன் இவரா..?

நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து கே.எல்.ராகுல் விலகுகவுள்ளதால் அந்த அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது மிகவும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஒவ்வொரு அணியும் குறைந்தது 9 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், பிளே ஆப் சுற்றுக்காக ஒவ்வொரு அணியும் கடுமையாக போராடி வருகின்றன. இந்நிலையில், கடந்த வாரம் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் பவுண்டரிக்கு சென்ற பந்தை தடுக்க முயன்ற லக்னோ அணியின் கேப்டன் கே. எல். ராகுலுக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மைதானத்தில் இருந்து உடனடியாக வெளியேறினார். மேலும், புதன்கிழமை சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ராகுல் விளையாடவில்லை அவருக்கு பதிலாக க்ருணால் பாண்டியா லக்னோ அணியின் கேப்டனாக செயல்பட்டார்.

இந்நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து கே.எல். ராகுல் விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு காலில் ஏற்பட்ட காயம் தீவிரம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. நடப்பு தொடரில் பேட்டிங்கில் சொதப்பி வரும் ராகுல், ரசிகர்களிடம் கடுமையான விமர்சங்களை பெற்று இருந்தார். அவரது ஸ்ரைக் ரேட் மிகவும் மேதுவாக உள்ளதால் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் அவரை கடுமையாக விமர்சனம் செய்தனர். இருப்பினும் ராகுல் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு ரசிகர்களின் பாராட்டை பெற்றார். கே.எல்.ராகுல் விலகவுள்ளதால் லக்னோ அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த போட்டியை வழிநடத்திய க்ருணால் பாண்டியா லக்னோ அணியின் கேப்டனாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Chella

Next Post

ஹைதராபாத்தில் நீதிமன்றம் அருகே ஒருவர் படுகொலை…..! காவல்துறையினர் தீவிர விசாரணை……!

Fri May 5 , 2023
இப்போதெல்லாம் நீதிமன்ற வளாகத்தில் கொலை நடைபெறுவது சர்வ சாதாரணமாகிவிட்டது. தற்போது பல்வேறு இடங்களில் நீதிமன்ற வளாகங்களில் கொடூரமான முறையில் நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில், ஹைதராபாத் உயர் நீதிமன்றம் நேற்று பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது அந்த நீதிமன்றத்தின் 6வது நுழைவாயில் முன்பு திடீரென்று ஒருவர் மற்றொருவரை பட்டாக்கத்தியால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உயிருக்கு போராடிக் […]

You May Like