தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டியை அடுத்த சண்முகா நதி அணை மற்றும்
சுற்றுப்புற வனப்பகுதியில் ஐந்தாம் நாளாக அரிசிக்கொம்பன் முகாம் நேற்று இரவு 7 கிலோமீட்டர் அடர்ந்த வனத்திற்குள் சென்ற அரிசிக்கொம்பன் இன்று காலை மீண்டும் சண்முகா நதி அணைப்பகுதிக்கு திரும்பியது காலை 7 மணிக்கு சண்முகா நதி நீர் தேக்க பகுதியில் தண்ணீர் குடித்துச் சென்றது அரிசிக் கொம்பன் திடகாத்திரமான உடல் நிலையோடு புது தெம்புடன் அரிசிக்கொம்பன் உள்ளதாக வனத்தில் முகாமிட்டிருக்கும் மருத்துவக் குழுவினர் தகவல்.
சண்முகா நதி அணையில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் அடர்ந்த வனத்திற்குள் அரிசி கொம்பன் முகாமிட்டுள்ளது. மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் வசதியான இடம் அது இல்லை வனத்தில் இருந்து விலகி சமதளமான இடம் கிடைக்கும் வரை காத்திருக்கின்றனர் வனத்துறை மற்றும் மருத்துவக் குழுவினர். எரசக்கநாயக்கனூர் சின்ன ஓவலாபுரம் பகுதிகளில் அரிசிக்கொம்பன் உலா வந்ததாக பரவும் செய்திகள் முற்றிலும் தவறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதிகளில் பாதுகாப்பு மட்டுமே போடப்பட்டுள்ளது.
24 மணி நேரமும் கண்காணிப்பு தீவிரப்படுத்தியுள்ளதாகவும் இதற்காக ரேடியோ காலர் சிக்னல்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை வன உயிரியல் காப்பக துணை இயக்குனர் ஆனந்த் தகவல்.