fbpx

கூவம் அருகே ஆக்கிரமித்து வசித்த மக்கள்…! சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு சொன்ன பதில்…!

சென்னையை சுற்றியுள்ள நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிட ஆக்கிரமிப்புகளை போர்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும் என்பதில் பெருநகர சென்னை மாநகராட்சி உறுதியாக உள்ளது. அந்த அடிப்படையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் தொடர்ந்து நடை பெற்று வருகின்றன.

கூவம், அடையாறு மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வரும் நீர்வழிக்கால்வாய்கள் போன்ற நீர்வழித்தடங்களில் மறுசீரமைப்பு செய்து பழைய நிலைக்கு கொண்டு வர பல்வேறு முயற்சிகளில் அரசு சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது. கூவம் கால்வாய் கரைகளை ஆக்கிரமித்து இரு புறமும் ஏராளமான வீடுகள், கட்டுமானங்கள் உள்ளன. இதனால் கால்வாயின் அகலம் சுருங்கி வந்தது. மழை, வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. இப்படி பல்வேறு பிரச்சனைகள் இருந்து வருகின்றன. அதேபோன்று சட்டவிரோதமாக ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களை அரசு அகற்றி வருகின்றன.

இந்த நிலையில் சட்ட விதிகளை பின்பற்றாமல் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது எனவும், மறு குடியமர்த்துவது தொடர்பான அரசின் கொள்கைகள், சட்ட விதிகளை கண்டிப்புடன் அமல்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் நகர்புற பாதிக்கப்பட்டோர் தகவல் மற்றும் ஆதார மையத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அரசுத் தரப்பில் நீதிமன்றத்தில் ராஜாராம் வழக்கறிஞர், சென்னையில், கூவம் நதிக்கரையில் ஆக்கிரமித்து வசித்த 14,257 குடும்பங்களில், 13,514 குடும்பங்கள் அப்புறப்படுத்தப்பட்டு, வேறு இடங்களில் மறு குடியர்த்தப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு சட்டப்படி அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அரசின் இது போன்ற திட்டங்களை முறையாக கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், கல்வி உரிமைச் சட்டப்படி, கல்வி பெறுவது அடிப்படை உரிமை எனவும், அடிப்படை கல்வி வழங்க வேண்டியது அரசின் கடமை என்பதால், மறு குடியமர்த்தப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் கல்வி பெற தேவையான நடவடிக்கைகளை எடுக்க அரசுக்கு உத்தரவிட்டனர்.

Vignesh

Next Post

'இப்படியே ஏறிக்கிட்டு போச்சுன்னா அவ்வளவு தான்’..!! ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா..? புலம்பும் இல்லத்தரசிகள்..!!

Sat Oct 28 , 2023
சென்னையில் தொடர்ந்து 4-வது நாளாக சின்ன வெங்காயம் ரூ.120-க்கு விற்பனையாவதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் வரத்தைப் பொறுத்து விலையில் மாற்றம் இருக்கும். அந்த வகையில், கடந்த வாரத்தை விட இந்த வாரம் காய்கறிகளின் விலை உயர்ந்து காணப்படுகிறது. வரத்து குறைவு காரணமாக வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது. கோயம்பேடு மொத்த விற்பனை சந்தையில் சின்ன வெங்காயம், முதல் ரகம் கடந்த வாரம் 60 ரூபாய்க்கும், இரண்டாம் […]

You May Like