62 வயதை கடந்த நடிகை கோவை சரளா, கடந்த 1979 ஆம் ஆண்டு வெளியான வெள்ளி ரதம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார். 25 ஆண்டு திரைப்பட வாழ்க்கையில், அவர் சுமார் 750 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது மற்றும் சிறந்த பெண் நகைச்சுவை நடிகைக்கான நந்தி விருது ஆகிய விருதுகளை பூவெல்லாம் உன் வாசம் (2001) மற்றும் ஒரி நீ பிரேம பங்கரம் கனு (2003) ஆகிய படங்களில் அவரது நடிப்புக்காக வென்றுள்ளார்.
15 படங்களில் ஹீரோயினாக நடித்துள்ள இவர், இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். திருமணம் செய்து கொள்ளாதது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர், பிறக்கும் போது நாம் தனியாகத்தான் பிறக்கிறோம், அதே போல இறக்கும் போதும் தனியாகத்தான் இறக்கிறோம். இதற்க்கு இடையில் இந்த உறவுகள் தேவையா என்று எனக்கு தோன்றியது. மேலும், நாம் சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற ஆசையில் தான் நான் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று அவர் கூறினார்.
எனக்கு யாரையும் சார்ந்து வாழ பிடிக்கவில்லை. இதனால் தான் நான் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று அவர் கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், நான் திருமணம் செய்யாததால் யாரோ ஒரு நபர் தப்பித்து விட்டார். அதனால் அவர் சந்தோஷமாக இருப்பார் தானே என்ற நகைச்சுவையாக கூறியுள்ளார்.