fbpx

கூவத்தூர் விவகாரம்.! அவதூறு பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை.! நடிகை திரிஷா விளக்கம்.!

கூவத்தூரில் எம்எல்ஏக்கள் விவகாரம் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் புயலை கிளப்பி இருக்கிறது. அதிமுக எம்எல்ஏக்கள் தமிழ் சினிமாவின் பிரபல நடிகைகளுடன் உல்லாசமாக இருந்தார்கள் இன்று அதிமுகவின் முன்னாள் நிர்வாகி பேட்டி அளித்த சம்பவம் அரசியல் வட்டாரங்களில் மட்டுமல்லாது சினிமாவிலும் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது .

சேலம் கிழக்கு மாவட்ட முன்னாள் ஒன்றிய செயலாளர் ஆக இருந்த ஏ.வி ராஜு என்பவர் அதிமுக எம்எல்ஏக்கள் பிரபல சினிமா நடிகையான திரிஷாவிற்கு பணம் கொடுத்து கூவத்தூர் ரிசார்ட்டில் உல்லாசமாக இருந்ததாக பரபரப்பான பேட்டி அளித்திருந்தார். அவரது இந்த பேட்டி தற்போது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்திருக்கிறது.

இது தொடர்பாக தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் நடிகை திரிஷா பரபரப்பான அறிக்கையை வெளியிட்டுள்ளார். தன்மீது பரப்பப்படும் அவதூறு குறித்து பதிவு செய்திருக்கும் அவர் ” மக்களின் கவனம் தன் மேல் விரட்டும் என்பதற்காக சிலர் அருவருப்பான செய்திகளை பகிர்ந்து வருவதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பதிவு செய்த அவர் குறித்த நபர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்க இருப்பதாகவும்” தெரிவித்துள்ளார்.

English Summary: Actres trisha strongly opposed the controversy against her regarding kuvathur resort issue.she said strict action will taken against the people who defame her.

Next Post

15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.! அதிமுக கவுன்சிலர் ஜாமீன் ரத்து.! உயர் நீதிமன்றம் அதிரடி.!

Tue Feb 20 , 2024
பரமக்குடியில் 15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில் அரசியல் கட்சித் தலைவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பரமக்குடியைச் சேர்ந்த 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், மறத்தமிழர் சேனை கட்சியின் தலைவர் புது மலர் பிரபாகர் மற்றும் அதிமுக கவுன்சிலர் சிகாமணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கூறி உயர் […]

You May Like