fbpx

KYC அப்டேட் மோசடி.. ஒரே போன்கால்.. ரூ.7.38 லட்சம் பணத்தை இழந்த ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்…

ஆன்லைன் பரிவர்த்தனைகள் அசுர வளர்ச்சி அடைந்துள்ள அதே சூழலில், சைபர் கிரைம் கணிசமாக அதிகரித்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. பல்வேறு நூதன வழிகளை பயன்படுத்தி, சைபர் குற்றவாளிகள் லட்சக்கணக்கில் பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர்.. எனவே ஆன்லைனில் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் போது, கவனமாக இருக்க வேண்டும்.. இந்நிலையில் KYC அப்டேட் செய்வதாக கூறி, சைபர் குற்றவாளிகள் செய்த மோசடியில் மும்பையை சேர்ந்த 72 வயதான ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் ஒருவர், ரூ.7.38 லட்சத்தை இழந்துள்ளார்.

பிப்ரவரி 4 அன்று அந்த முதியவருக்கு அழைப்பு வந்தது.. அதில் பேசிய நபர், KYC ஆவணங்களை புதுப்பிக்காததால் அவரின் வங்கிக் கணக்கு முடக்கப்படுவதாக கூறியுள்ளார்.. மேலும் வங்கிக் கணக்கு முடக்கப்பட கூடாது எனில், தான் கேட்கும் விவரங்களை தர வேண்டும் என்று போனில் பேசிய நபர் கூறியுள்ளார்.. இதனால் பதறிப்போன அந்த முதியவர், வங்கி கணக்கை முடக்காமல் இருக்க, தனது ஏடிஎம் கடவுச்சொற்கள் மற்றும் சேமிப்புக் கணக்குகளின் விவரங்கள் போன்ற நிதி விவரங்களை பகிர்ந்துள்ளார்..

இதன் மூலம் அந்த முதியவர் மற்றும் அவரது மனைவியின் வங்கிக் கணக்குகளில் இருந்து மாதாந்திர ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய சேமிப்பு உள்ளிட்ட பணத்தை சைபர் குற்றவாளிகள் தங்கள் கணக்கிற்கு மாற்றி உள்ளனர்.. அந்த முதியவர் மற்றும் அவரின் மனைவியின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.7.38 லட்சம் திருடப்பட்டுள்ளது..

இதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட முதியவர், காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.. இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அடையாளம் தெரியாத இருவர் மீது தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66 சி மற்றும் 66 டி பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.. அவர்களிடம் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Maha

Next Post

மீண்டும் முதல்வராக பதவியேற்றார் மாணிக் சாஹா..!! அரசியல் தலைவர்கள் வாழ்த்து..!!

Wed Mar 8 , 2023
திரிபுராவில் சட்டப்பேரவைத் தேர்தல் அண்மையில் நடைபெற்றது. இதில், பாஜக 32 இடங்களிலும், கூட்டணிக் கட்சியான ஐபிஎஃப்டி 1 இடத்திலும் வெற்றி பெற்றன. இந்நிலையில், தனிப்பெரும்பான்மை பெற்ற பாஜகவின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டப்பேரவை கட்சித் தலைவராக மாணிக் சாஹா மீண்டும் ஒருமனதாக செய்யப்பட்டாா். இதைத்தொடர்ந்து, திரிபுரா மாநிலம் அகர்தலாவில் உள்ள சுவாமி விவேகானந்தா மைதானத்தில் பதவியேற்பு விழாநடைபெற்றது. இந்த விழாவில், அமைச்சர்களாக ரத்தன்லால் நாத், பிரஞ்சித் சிங்க ராய், டிங்கு, ராய், […]
மீண்டும் முதல்வராக பதவியேற்றார் மாணிக் சாஹா..!! அரசியல் தலைவர்கள் வாழ்த்து..!!

You May Like