fbpx

பெண்களே நற்செய்தி.. இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.320 குறைவு…

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.44,800க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இதனால் தங்கம் விலை உயர்வதும், பின்பு குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது..

#Gold Rate..!! ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை..!! அதிர்ச்சியில் நகை பிரியர்கள்..!!

இந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது.. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ. 40 குறைந்து ரூ.5,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.44,800க்கு விற்பனையாகிறது.. எனினும் வெள்ளியின் விலை இன்று உயர்ந்துள்ளது.. இதே போல் வெள்ளியின் விலையும் 20 காசுகள் குறைந்து ரூ.80க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.80,000க்கு விற்பனையாகிறது.

வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்ததன் எதிரொலி தங்கம் விலை குறைந்து வருவதாக கூறப்படுகிறது.. இதன் மூலம் 5 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

Maha

Next Post

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை…..! தென்காசி அருகே பரிதாபம்…!

Mon Apr 10 , 2023
தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியில் இருக்கின்ற கரையாளர் தெருவை சேர்ந்தவர் தங்கையா. இவருக்கு 45 வயதில் ஒரு மகள் இருந்துள்ளார். அவருக்கு கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் தாய் தந்தையர் மரணம் அடைந்துவிட்ட நிலையில் அவர் மட்டும் தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில்,அந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் வசித்து வந்த பாழடைந்த வீட்டில் இன்று […]

You May Like