fbpx

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுலுக்கு த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து..!!

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி நியமிக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்தார். இதையடுத்து, அடுத்து அரசியல் தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், ”புதிய பதவிக்கு தேர்வாகியுள்ள எனது சகோதரர் ராகுல் காந்தியை இந்தியா வரவேற்கிறது. மக்களவையில் அவரது குரல் தொடர்ந்து வலிமையாக ஒலிக்கட்டும்” என்று வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு வாழ்த்துகள் ராகுல் காந்தி. நமது நாட்டு மக்களுக்கு சேவை செய்ய எனது மனமார்ந்த வாழ்த்துகள்” என கூறியுள்ளார்.

Read More : அடடே..!! இப்படி ஒரு கிராமமா..? நம்பவே முடியல..!! ரூ.10 லட்சம் வருமானம்..!! அப்படி என்ன தொழில் பண்றாங்க..?

English Summary

Actor and president of Tamil Nadu Vetri Kazhagam Vijay has congratulated Rahul Gandhi.

Chella

Next Post

கள்ளக்காதலனை தேடி கந்தர்வகோட்டைக்கு வந்த வடமாநில பெண்..!! பின்னாடியே வந்த கணவர்..!! நடந்தது என்ன..?

Wed Jun 26 , 2024
The incident of a woman from the northern state who came to Tamil Nadu in search of her fake lover has created a sensation.

You May Like