உரிமம் பெறாத இடங்களில் மதுபானம் விற்பனை செய்தால் சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும்.
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை ஆணையர் தனது உத்தரவில்; மதுபானங்களை விற்பனை செய்ய, தமிழக அரசால், விற்பனை உரிமங்கள் வழங்கப்படுகின்றன. அவ்வாறு உரிமம் பெறாமல், உணவகங்கள், தாபா போன்ற சிறுகடைகள் மற்றும் உரிமம் பெறாத வேறு இடங்களில், மதுபானம் விற்பனை செய்வது சட்டப்படி குற்றம். மீறி விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என கட்டிட உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் மனு.
தமிழகத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை மாநில அரசின் முடிவை எதிர்த்து மொத்தம் 24 கட்டிட உரிமையாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுதாரர்கள் தங்களது மனுவில் தலா ரூ.30 லட்சம் முதலீடு செய்து, கட்டிட வளாகத்தை மதுக்கடைகள் மற்றும் விற்பனை நிலையங்கள் நடத்துவதற்கு ஏற்றதாக மாற்றியுள்ளதாக தெரிவித்தனர்.
5,329 கடைகளில் 500 கடைகளை அடையாளம் காண மாநில அரசு அரசாணை பிறப்பித்தது. இதனை ரத்து செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கு நீதிபதி சி.சரவணன் முன் விசாரணைக்கு வந்தபோது, 2 வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.