fbpx

பழம்பெரும் நடிகை திடீர் மரணம் !!

பாலிவுட் நட்சத்திரமாக ஜொலித்துவந்த பழம்பெரும் நடிகை திடீரென மணரம் அடைந்தது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகை தபசும் 1940களில் சினிமா துறையில் தனது வாழ்க்கையை தொடங்கினார். பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் நடித்த பெரும்பாலான படங்கள் ஹிட் கொடுத்தன. தற்போது 78 வயதாகும் தபசும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் அவர் மாரடைப்பு ஏற்பட்டு மும்பையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான தபசும் தூர்தர்ஷனில் ’பூல் கிலே ஹேயின் குல்ஷன் குல்ஷன்’ என்ற டாக் ஷோவிற்கு தொகுப்பாளராக இருந்தார். பின்னர் 2006ம் ஆண்டு யூடியூப் நிகழ்ச்சியான தபசும் டாக்கீஸ் என்ற சேனலை நடத்தி வந்தார்.  பின்னர் ப்யார்கே தோ நாம் ஏக் ராதா ஏக் ஷ்யாம் என்ற தொலைக்காட்சி சீரியலில் நடித்தார்.

தபசும் இறப்பை அவரது பேத்தி குஷி இன்ஸ்டா பக்கத்தில் உறுதி செய்துள்ளார். ’’ரெஸ்ட் இன் பீஸ்’’ தாதீஜி என பதிவிட்டு உங்கள் புன்னகை, உறுதிப்பாடு, மரபு என்றும் வாழும் என்று அவர் பதிவிட்டுள்ளார். மேலும் வரும் திங்கள் கிழமை தபசும் நினைவஞ்சலி கூட்டம் நடைபெறும் என்பதையும் அவரது குடும்பத்தினர் அறவித்துள்ளனர்.

Next Post

தமிழக ரேஷன் கடையை உதாரணமாக காட்டிய மத்தியஅரசு!!

Sat Nov 19 , 2022
ரேஷன் கடைகளை மாற்றியமைப்பதற்கான சிறந்த நடைமுறைகளில் ஒன்று தமிழக அரசு என நிரூபித்துள்ளது என பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தமிழக அரசை மத்திய அரசு புழ்ந்துள்ளது. தமிழக ரேஷன் கடைகள் சிறந்த மாற்றங்களை கொண்டுள்ளதாக மத்திய அரசு பாராட்டியுள்ளது. இது நம்பகத்தன்மையை மேம்படுத்தியுள்ளது எனவும் கூடுதல் வருவாய் வழிகளை ஆராய மற்ற மாநிலங்கள் வேறு வழிகளை ஆராய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. உணவுத்துறைச் செயலாளர்கள் மாநாட்டிற்கு பின்னர் மத்தியஅஉணவு அமைச்சகம் […]

You May Like