fbpx

இனி எலுமிச்சை விதையை தூக்கி போடாதீங்க.. உடம்பில் எங்கு வலி வந்தாலும் இது மட்டும் போதும்..

பொதுவாகவே நாம் அனைவரும் எலுமிச்சை பழம் பயன்படுத்தி இருப்போம். ஆனால் அப்போது எலுமிச்சை பழத்தை பயன்படுத்தினாலும், அதில் உள்ள விதையை தூக்கி எறிந்து விடுவோம். அப்படி நாம் குப்பை என்று தூக்கி எரியும் எலுமிச்சை விதையில் பல நன்மைகள் உள்ளது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், எலுமிச்சை விதையில் சாலிசிலிக் என்ற அமிலம் உள்ளது. இந்த அமிலம் நமது உடல் உள்ள வலியை கட்டுப்படுத்த பெரிதும் உதவும். ஆம், இதற்க்கு நீங்கள் எலுமிச்சை பழம் விதையை நன்கு கழுவி, அதை பேஸ்ட் பதத்திற்கு அரைத்து விடுங்கள். இப்போது இந்த பேஸ்ட்டை உடலில் எங்கு வலி இருந்தாலும் அந்த இடத்தில் தடவுங்கள். நீங்கள் இப்படி செய்வதால் உங்கள் உடலில் உள்ள வவி கட்டாயம் விரைவாகவே குணமடையும்.

மேலும், குழந்தைகளை அதிகம் பாதிக்கும் நூல் புழு பிரச்சனைக்கு இது ஒரு நல்ல தீர்வு. உங்கள் குழந்தைகளுக்கு நூல் புழு பிரச்சனை இருந்தால், அவர்களுக்கு வயிற்று வலி, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, பசியின்மை, எடை இழப்பு, பலவீனம், சோர்வு ஆகியவை ஏற்படும். இதனால் இது மலக்குடல் மற்றும் சிறுநீர் தொற்று ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதற்கு நீங்கள் எலுமிச்சை விதைகளை சுத்தம் செய்து விட்டு, நன்றாக நசுக்கி தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். பிறகு அந்த நீரை குடித்து வந்தால் இந்த பிரச்சனை விரைவில் குணமாகிவிடும்.

இந்த எலுமிச்சை விதை, ஆரோக்கியத்திற்கு மட்டும் இல்லாமல், முகப்பொலிவிற்கும் பயன்படும். இதற்க்கு நீங்கள் எலுமிச்சை விதைகளை நன்றாக நசுக்கி தேனில் கலந்து முகத்தில் தடவி வந்தால் பருக்கள் போன்ற சரும பிரச்சனை நீங்கி புகம் பொலிவாகும். மேலும், இந்த பேஸ்ட்டை விரல் தொற்று ஏற்பட்ட இடத்தில் தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.

Read more: “சொந்த அண்ணனை சைட் அடிப்பியானு கேப்பாங்க..” சூர்யாவின் தங்கைக்கு நேர்ந்த சம்பவம்..

English Summary

lemon seeds for body pain

Next Post

தமிழன்டா!. அந்த பயம் இருக்கனும்!. குகேஷுடன் மோதுவதில் விருப்பம் இல்லை!. உலகின் NO.1 வீரர் மேக்னஸ் கார்ல்சன் அறிவிப்பு!

Sat Dec 14 , 2024
Magnus Carlsen: உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு பாராட்டு தெரிவித்த முன்னாள் உலக செஸ் சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான மேக்னஸ் கார்ல்சன், இனி குகேஷுடன் மோதுவதில் எனக்கு விருப்பம் இல்லை என்று தெரிவித்துள்ளார். இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்தது. இந்தப் போட்டி 14 சுற்று கொண்டது. நேற்று முன்தினம் 14-வது […]

You May Like