fbpx

கொடுத்த கடனைத் திருப்பி கேட்டதால், துடிக்கத் துடிக்க கொலை.! டெல்லியில் கடன் பெற்றவரின் வெறிச்செயல்.!

புதுடெல்லியில், கொடுத்த கடனைத் திருப்பி கேட்ட நபரை, கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இறந்த நபரின் மகன் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளியைப் பிடிக்க ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

டெல்லியின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள தயால்பூர் பகுதியில் 58 வயது ஜாஹூருதீன் வசித்து வந்தார். அவர் காலணிகளை தயாரிக்கும் தொழிலை செய்து வந்தார். அவரது அண்டை வீட்டுக்காரரான ஷாகித், அவரிடமிருந்து ₹10,000த்தை கடனாகப் பெற்றார். பணத்தை திருப்பித் தருமாறு ஷாகித்திடம், ஜாஹூருதீன் பலமுறை கேட்டிருக்கிறார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டு வந்திருக்கின்றன.

கடந்த சனிக்கிழமை, மதியம் 1.30 மணியளவில், பாரத் டெய்ரிக்கு அருகே, கொடுத்த கடனைத் திருப்பி கேட்ட ஹாஹுருதீனை கத்தியால் கொடூரமாக தாக்கியுள்ளார் ஷாகித். ஜாஹூருதீன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

ஜாஹாருதீனின் மகன் சொஹைல் அளித்த புகாரின் பேரில், ஷாகிதின் மீது கொலை வழக்கு பதிவு செய்து, காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். குற்றவாளியைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கொடுத்த கடனைத் திருப்பி கேட்டதற்காக கொலையுண்ட இந்த சம்பவம், அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Post

"பாஜகவுடன் எப்போதும் கூட்டணி இல்லை.." "மக்கள் தான் நம்பிக்கை " - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு.!

Sun Feb 11 , 2024
2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி இல்லை என அந்தக் கட்சியின் பொதுச்செயலாளரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுக கட்சி மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைத்து செயல்பட்டு வந்தது . 2019 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலிலும் 2021 ஆம் வருட சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக மற்றும் பாஜக இணைந்து […]

You May Like