விஜய்யின் லியோ திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது. இதனால் தமிழ் மட்டுமின்றி மற்ற மொழி ரசிகர்களும் லியோவை கொண்டாடி வருகின்றனர். இந்தப் படத்தின் அதிகாலை 4 மணி கட்சி, தமிழ்நாட்டைத் தவிர மற்ற மாநிலங்களில் திரையிடப்பட்டது. அதன்படி, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, பெங்களூரு போன்ற பல ஏரியாக்களில் லியோ FDFS அதிகாலை 4 மணிக்கு காட்சி தொடங்கியது. தற்போது இந்த படம் குறித்து பாசிட்டிவ் விமர்சனங்களே வந்து கொண்டு இருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு இருந்த எதிர்பார்ப்பையும், இந்த படம் பூர்த்தி செய்துள்ளதாக தெரிகிறது. மேலும் இந்த படம் LCUவில் இணைகிறதா என்ற கேள்விக்கு தற்போது பதிலும் கிடைத்துள்ளது. ரசிகர்களின் கொண்டாட்டத்தில் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் இந்த படம் தற்போது இணையத்தில் கசிந்துள்ளது. இதன் காரணமாக படக்குழு அப்செட்டில் இருக்கிறதாம்.
ஏனென்றால் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் பகல் 4 மணி காட்சிக்கு தமிழகத்தில் எவ்வளவு முயற்சித்தும் அனுமதி கிடைக்காமல் போனது, அதேபோல் தியேட்டர் உரிமையாளர்களுடன் பேச்சுவார்ததை சாதகமாக அமையவில்லை, போன்ற காரணத்தால் அப்செட்டில் இருந்த நிலையில் தற்போது படம் இணையத்தளத்தில் லீக் ஆனது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தும்.
இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், த்ரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.