லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் லியோ. த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படமானது அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்களால் மிகவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் போஸ்டர்கள் ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வந்தது.
இப்படத்தின் இசை வெளியீடு செப்.30ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சில தினஙக்ளுக்கு முன் தயாரிப்பு நிறுவனம் இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்ததாக அறிவித்தது. இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தினாலும் அடுத்தடுத்து அப்டேட்களை கொடுத்து கவலையில் இருந்த விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது படக்குழு. அதன்படி லியோ படத்தின் இரண்டாவது பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி லியோ படத்தின் 2 வது பாடல் தற்போது வெளியாகியுள்ளது. Badass என தொடங்கும் இப்பாடல் அனிருத் குரலில் பட்டையைகிளப்பும் வரிகளில் உள்ளது. மேலும் லியோ ட்ரெய்லர் அடுத்த வாரம் வெளியாக உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.