பாகிஸ்தானின் கராச்சியில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதக் குழுவின் நிதியாளரும் ஹபீஸ் சயீத்தின் நெருங்கிய உதவியாளருமான காரி அப்து ரஹ்மான் அடையாளம் தெரியாத ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், முகமூடி அணிந்த ஒருவர் துப்பாக்கியுடன் ரெஹ்மானின் கடைக்குள் வருகிறார். ரெஹ்மான் கவுண்டருக்குப் பின்னால் நின்று கொண்டிருந்தபோது, அவரை துப்பாக்கியால் சுட்டார். இதனால் சம்பவ இடத்திலேயே காரி அப்து ரஹ்மான் உயிரிழந்தார். துப்பாக்கி ஏந்திய அந்த மர்ம நபர் கடையில் இருந்த மற்றொரு நபரை சுட்டுக் கொன்றதையும் வீடியோ காட்டுகிறது. சம்பவம் நடந்த போது அருகில் ஒரு சிறுவனும் நின்று கொண்டிருந்தான். அதிர்ஷ்டவசமாக சிறுவனுக்கு காயங்கள் ஏதும் ஏற்படவில்லை.
🚨Eid ki Eidi for Hafiz Saeed
— Amitabh Chaudhary (@MithilaWaala) March 31, 2025
Financier of Lashkar-e-Taiba, Qadri Abdu Rehman , who also is a relative of India’s Most Wanted Hafiz Saeed has been Shot dead by Unknown Gunmen in Karachi.#EidMubarak pic.twitter.com/stOuSqjoh3
மார்ச் 16 அன்று பாகிஸ்தானில் மற்றொரு பயங்கரவாதியும் ஹபீஸ் சயீத்தின் நெருங்கிய உதவியாளருமான அபு கட்டால் கொல்லப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கட்டால், 2017 ரியாசி குண்டுவெடிப்பு மற்றும் 2023 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீதான தாக்குதல் உள்ளிட்ட பல உயர்மட்ட தாக்குதல்களில் ஈடுபட்டிருந்தார்.
அவரது மரணம் பல ஆண்டுகளாக அவரது நடமாட்டத்தைக் கண்காணித்து வந்த இந்திய அமைப்புகளின் நீண்டகால தேடுதலுக்கும் முற்றுப்புள்ளி வைத்தது. பிராந்தியத்தில் பயங்கரவாதத் தாக்குதல்களைத் திட்டமிடுவதிலும் செயல்படுத்துவதிலும் தீவிரமாக ஈடுபட்டதால், கட்டால் இந்தியாவின் மிகவும் தேடப்படும் பட்டியலில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Read more: ஜூன் வரை வழக்கத்தை விட அதிக வெப்பம் இருக்கும்..!! – இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்