fbpx

மக்களே கவனம்… நாளை மின் தடை…! எந்தெந்த பகுதிகளில் தெரியுமா…? முழு விவரம் இதோ…

சென்னையில் நாளை எந்த பகுதிகளில் மின் நிறுத்தம் என்பதை பார்க்கலாம்.

சென்னையில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பூந்தமல்லி, அம்பத்தூர் பகுதிகளில் மின் விநியோகம்நிறுத்தப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. மேலும், மதியம் 2 மணிக்குள் பராமரிப்புப் பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் வழக்கம்போல வழங்கப்படும்.

அதன் படி, பூந்தமல்லி பகுதியில் உள்ள மணலி சரவணா நகர், சக்தி நகர், பாஷ்யம் அடுக்கு மாடி, அம்மன் நகர், மீரா நகர், பஜனை கோவில் தெரு, ருக்குமணி நகர், முத்துகுமரன் நகர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அம்பத்தூர் பகுதியை பொறுத்தவரை, அன்னை நகர் கண்டிகை, பெருமாள் கோவில் தெரு, மேட்டு காவியா நகர், லேக் வியூ கார்டன் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

போதைப்பொருள் உட்கொண்டவர்கள் ஜாம்பியாக மாறிய அதிர்ச்சி!... உடலில் துளையிட்டு அச்சுறுத்தும் அபாயம்!... அமெரிக்காவில் அச்சம்!

Fri Feb 24 , 2023
அமெரிக்காவில் சைலாசின் என்ற போதைப்பொருளை உட்கொண்ட நபர்கள் ஜாம்பி போன்று மாறியும் உடலில் துளைகள் ஏற்பட்டு வீதிகளில் தள்ளாடும் வீடியோ வெளியாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரத்தையடுத்து போதை பயன்பாடே பெரிய அபாயமாக மாறியுள்ளது. போதைப்பொருள் எடுத்துக் கொள்ளும் நபர்கள் வன்முறையிலும் ஈடுபடுவதால் அவர்களை சுற்றியுள்ளவர்களின் உயிருக்கும் கூட ஆபத்து ஏற்படும் சூழல் நிலவுவருகிறது. இதனால் போதைப்பொருள் பயன்பாட்டிற்குக் கடுமையான தடையை விதிக்க வேண்டும் என்று பலர் […]

You May Like