fbpx

2 வயது குழந்தைக்கு ஆயுள் தண்டனை!! வடகொரியாவில் நடந்த பகீர் சம்பவம்!!

வட கொரியாவில் கிம் ஜாங் யுன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. மிக கடுமையான கட்டுப்பாடுகளுடன் கம்யூனிஸ்ட் ஆட்சி நடத்தி வரும் அதிபர் கிம் அடிக்கடி பல பகீர் உத்தரவுகளை போட்டு, உலகையே அதிர்ச்சி அடைய செய்வார். இந்நிலையில், சர்வதேச அளவில் நிலவும் மத சுதந்திரம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் வடகொரியாவில் கிறிஸ்துவம் உள்ளிட்ட மதங்களை பின்பற்ற தடை உள்ள நிலையில், சுமார் 70,000 பேர் கிறிஸ்துவ மதத்தை பின்பற்றுவதற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 2009ஆம் ஆண்டில் ஒரு குடும்பத்தினர் கையில் பைபிள் வைத்திருந்ததால் கைது செய்யப்பட்டனர். அதில் அந்த குடும்பத்தை சேர்ந்த 2 வயது குழந்தை உள்ளிட்ட அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பெற்றோர் பைபிள் வைத்திருந்ததற்காக 2 வயது சிறுவனுக்கு ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுமார் 70,000 பேரின் நிலை மிக மோசமாக உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rupa

Next Post

தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கும்- இந்திய வானிலை ஆய்வு மையம்

Sun May 28 , 2023
ஜூன் மாதத்தில் தொடங்கும் தென்மேற்கு பருவமழைக் காலத்தில் இயல்பான அளவில் மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை பெய்யும் தென்மேற்குப் பருவமழையானது வழக்கம் போல சற்று தாமதமாகவேத் தொடங்கும் என்றும் ஜூன் மாதத்தில் இயல்பை விடவும் குறைவான மழையே இருக்கும் எனவும் இந்த மழைக் காலத்தில் இயல்பை விட […]

You May Like