மத்திய அரசு வெளியிட்டுள்ள அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலில் புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகள் , தடுப்பூசிகள் உள்பட 384 மருந்துகளை மலிவு விலையில் இனி பெறலாம்…..
மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்த அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலில் புதியதாக 34 மருந்துகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதேபோல 26 மருந்துப் பொருட்கள் இந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதில் , ஆன்டசிட் சால்ட் ரானிடிடின் என்ற மருந்து நீக்கப்பட்டுள்ளது. இது பொதுவாக இருமல், செரிமான கோளாறு, வயிற்று வலி , நெஞ்சு எரிச்சல் போன்றவற்றிற்கு எடுத்துக் கொள்ளக் கூடிய மாத்திரை. புற்று நோய் சிகிச்சைக்கான மாத்திரையை மலிவு நிலையில் வழங்கும நிலையில் , இந்த மருந்து நீக்கியது குறிப்பிடத்தக்கது.
இந்த மருந்தை தயாரிக்கும் நிறுவனமான ஜன்டாக் , உலகிலேயே முதல் இடத்தில் உள்ளது. புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 34 மருந்து பட்டியலில் புற்று நோய்க்கான மருந்து , ஆன்டிபயாடிக் , தடுப்பூசிகள் தொற்றுநோய்க்கான மருந்துகள் மலிவான விலையில் வாங்க முடியும் . இதனால் நோயாளிகள் அதிக செலவை குறைக்கலாம்.
கல்லீரலை தொற்றும் நோய்களுக்கான மருந்துப் பொருட்களும் இந்த பட்டியலில் அரசு சேர்த்துள்ளது. மொத்தம் 384 மருந்துகள் பட்டியலில் உள்ளன. மலிவு விலைப்பட்டியலில் முக்கிய மருந்துகள் சேர்க்க ஒரே காரணம் பாதுகாப்பு மற்றும் அதன் விலை … இந்த மருந்துகள் பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளித்து புதுப்பிக்கப்பட்டுள்ளது.