பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர்ப்பட்டியலை இறுதி செய்ய டிசம்பர் 12-ம் தேதி வரையிலும் அவகாசம் அளித்து அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா அனுப்பி உள்ள கடித்ததில், 2022-23 ம் கல்வியாண்டில் 10,11-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்கான பெயர் பட்டியல் தயாரிக்க 14-ம் தேதி முதல் 30-ம் தேதி வரையில் கல்வித் தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
ஆனால் சில பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பெயர் விபரங்களை திருத்தம் செய்ய கால அவகாசம் கேட்டுள்ளனர். எனவே டிசம்பர் 12-ம் தேதி வரையில் கல்வித்தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் கால அவகாசம் வழங்கப்படுகிறது. இதுவே கடைசி வாய்ப்பாகும். பொதுத்தேர்வில் பங்கேற்கும் மாணவர்களின் விவரங்களில், தவறு ஏதும் நிகழாமல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.