fbpx

ஆன்லைன் செயலியில் கடன்..!! ஆபாச படத்துடன் வெளியான புகைப்படம்..!! திடீரென மாயமான பெண்..!!

ஆன்லைன் செயலி மூலம் கடன் பெற்ற ஒரு பெண்ணின் புகைப்படத்தை மோசடி கும்பல் ஒன்று, மார்பிங் செய்து அதை உறவினர்களுக்கு அனுப்பிய நிலையில், அந்தப் பெண் தற்போது காணாமல் போயுள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள நம்பியூர் இருகாலூர் பகுதியைச் சேர்ந்தவர் டிரைவர் வெங்கடாச்சலம். இவரது மனைவி மோகனசுந்தரி. இவர்களுக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், வெங்கடாசலம் காணாமல்போன தனது மனைவியை கண்டுபிடிக்க கோரி நம்பியூர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், ”தன் மனைவி மோகனசுந்தரி ஆன்லைன் செயலி மூலமாக கடன் பெற்றிருந்ததாகவும், ஆன்லைன் மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் மோகனசுந்தரியின் செல்போனை ஹேக் செய்து அதில் இருந்த அனைத்து போன் நம்பர்களையும் எடுத்து அனைவருக்கும் அவரது போட்டோவை மார்பிங் செய்து அனுப்பியுள்ளதாவும், இதனால் அதிர்ச்சி அடைந்த மோகனசுந்தரி மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் செயலியில் கடன்..!! ஆபாச படத்துடன் வெளியான புகைப்படம்..!! திடீரென மாயமான பெண்..!!

இதனிடையே, தனது மூத்த மகனிடம் கோயிலுக்கு சென்று வருவதாகக் கூறிவிட்டு, சென்ற மோகனசுந்தரி, வீடு திரும்பவில்லை எனவும், உறவினர்கள் அக்கம்பக்கத்தில் உள்ள வீடுகளில் தேடியும் அவர் கிடைக்காததால் காணாமல்போன தனது மனைவியை கண்டுபிடித்து தர வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். மேலும், சம்பந்தப்பட்ட ஆன்லைன் செயலி கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

பிக்பாஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சி வழங்கிய விஜய்டிவி!

Thu Dec 22 , 2022
சற்றேற குறைய 6 வருடங்களாக பிரபல விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதுவரையில் நடைபெற்றுள்ள 6 சீசன்களிலும் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்து வருபவர் நடிகர் கமலஹாசன். இந்த நிகழ்ச்சிக்கும், அவருக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருப்பதை போல் தான் தெரிகிறது. கமலஹாசன் இந்த நிகழ்ச்சியின் போது பேசும் இடம் அவர் நடந்து கொள்ளும் விதம் உள்ளிட்டவை அனைத்துமே ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.இந்த நிகழ்ச்சியில் […]
அக்டோபரில் தொடங்கும் பிக்பாஸ் சீசன் - 6..? மீண்டும் வருகிறார் கமல்..! போட்டியாளர்கள் இவர்கள்தான்..!

You May Like