fbpx

ஜாலி…! இன்று 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை…!

இன்று 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அய்யா வைகுண்டசாமியின் 193வது பிறந்த நாள் விழா இன்று நடைபெறுவதை முன்னிட்டு திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்று வரும் பொதுத் தேர்வுகள் மற்றும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட நாளில் அரசு பொதுத் தேர்வுகள் ஏதுமிருப்பின் பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், பொதுத் தேர்வு நடைபெறும் பள்ளிகள் மற்றும் பொதுத் தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறையானது பொருந்தாது எனவும், மேற்படி இன்று உள்ளூர் விடுமுறை நாளன்று நடத்தப்படும் அரசு பொதுத் தேர்வுகள் அனைத்தும் எவ்வித மாறுதலுமின்றி நடைபெறும்.

மேற்படி உள்ளூர் விடுமுறையானது செலவாணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது. இம்மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு அரசு காப்புகள் தொடர்பாக அவசரப் பணிகளை கவனிப்பதற்காக செயல்படும். உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் (15.03.2025) சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. அதேபோல மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் திருவிழாவையொட்டி, விழுப்புரம் மாவட்டத்திற்கும் இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

English Summary

Local holiday for schools, colleges, government offices in 5 districts today

Vignesh

Next Post

ஒரு வாரத்திற்கு இனிப்பு மட்டும் சாப்பிடாம இருந்து பாருங்க..!! உடலில் இவ்வளவு மாற்றங்கள் நடக்குமா..?

Tue Mar 4 , 2025
By avoiding sugary foods for a week, you can directly see changes in body weight and fat.

You May Like