நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவுகிறது.
அதிமுகவை பொறுத்தவரை எஸ்டிபிஐ, புதிய தமிழகம் கட்சிக்கு தலா ஒரு தொகுதிகளும், தேமுதிகவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் முதற்கட்ட 16 வேட்பாளர்களின் பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு, எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்று விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
1.திருவள்ளூர் (தனி)
2.மத்திய சென்னை
3.கடலூர்
4.தஞ்சாவூர்
5.விருதுநகர்
Read More : CM Stalin | பிரதமர் வேட்பாளர் யார்..? நச்சுன்னு பதில் கொடுத்த முதல்வர் முக.ஸ்டாலின்..!!