fbpx

Lok Sabha election 2024: மக்களவைத் தேர்தல் தற்போதைய நிலவரம்..! தனித்து ஆட்சி அமைக்குமா பாஜக..!

இந்தியாவில் 18வது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்ட தேர்தல் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கியது. 2ஆம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26ஆம் தேதியும், 3ஆம் கட்ட தேர்தல் மே 7ஆம் தேதியும், 4ஆம் கட்ட தேர்தல் மே 13ஆம் தேதியும், 5ஆம் கட்ட தேர்தல் மே 20ஆம் தேதியும், 6ஆம் கட்ட தேர்தல் மே 25ஆம் தேதியும் நடைபெற்றது. இறுதி கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி நடந்தது. இதனையடுத்து நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. தபால் வாக்குகளை பொறுத்தவரை பாஜகவே முன்னணியில் இருந்தது. இது இண்டியா கூட்டணிக்கு ஆரம்பகட்ட சறுக்கலாக அமைந்தது. இந்நிலயில் தற்போதைய நிலவரப்படி பாஜக கூட்டணி 293 இடங்களிலும், இண்டியா கூட்டணி 232 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. இதர கட்சிகள் 19 இடத்தில் முன்னிலை வகித்து வருகின்றன. இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், இண்டியா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக 37 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பாஜக கூட்டணி 1 தொகுதியிலும் (தருமபுரி), அதிமுக கூட்டணி- 1 தொகுதியிலும் (விருதுநகர்) முன்னிலையில் உள்ளது.

கடந்தமுறை தனித்து ஆட்சியமைத்த பாஜக தற்போது கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து தான் ஆட்சி அமைக்கும் நிலையில் உள்ளது. தற்போது கூட்டணி கட்சிகள் முன்னிலையில் உள்ள இடங்களை தவிர பாஜக 265 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. தனித்து ஆட்சியமைக்க 272 தொகுதிகள் தேவைப்படும் நிலையில் தற்போது உள்ள நிலவரப்படி கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து தான் ஆட்சி அமைக்கும் நிலையில் உள்ளது பாஜக.

Read More: அயோத்தியில் பாஜக பின்னடைவு! ஆடிப்போன மோடி! தற்போதைய நிலவரம் என்ன?

English Summary

Lok Sabha election 12 o’clock situation..! Will BJP form a separate government?

Kathir

Next Post

விளவங்கோடு இடைத்தேர்தல் இந்த கட்சி தான் முன்னிலையாம்..!! அதிமுகவை தூக்கி அடித்த பாஜக..!!

Tue Jun 4 , 2024
The Congress party is maintaining its lead in the assembly by-elections in Vilavankode.

You May Like