சூப்பர்சோனிக் கமர்ஷியல் ஜெட் பயணத்தின் மூலம் ‘உலகின் அதிவேக விமானம்’ சாத்தியமாக உள்ளது.. ‘ஓவர்ச்சர்’ (overture) என்ற சூப்பர்சோனிக் ஜெட் லண்டனில் இருந்து நியூயார்க்கிற்கு சுமார் மூன்றரை மணி நேரத்தில் பறக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓவர்ச்சர் – சுற்றுச்சூழலுக்கு உகந்த விமானம் என்று கூறப்படுகிறது.. அமெரிக்காவின் டென்வரை தளமாகக் கொண்ட பூம் சூப்பர்சோனிக் உருவாக்கியுள்ளது.
நியூயார்க்கில் இருந்து லண்டனுக்கு 3.5 மணி நேரத்தில் பறக்கும் சூப்பர்சோனிக் ஜெட் விமானம், 2029 ஆம் ஆண்டில் அறிமுகமாக உள்ளது. ஆனால் இந்த சூப்பர்சோனின் விமானத்தின் டிக்கெட் விலை மிக அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.. சூப்பர்சோனிக் ஜெட் வெறும் ஐந்து மணி நேரத்தில் மியாமியில் இருந்து லண்டனுக்கும், லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து ஹொனலுலுவுக்கு மூன்று மணி நேரத்திலும் பறக்கும் வாய்ப்பும் உள்ளது.
நியூயார்க்கில் இருந்து லண்டனுக்கு சுமார் மூன்றரை மணி நேரத்தில் செல்லும் இந்த விமானத்தின் டிக்கெட் $4,000 முதல் $5,000 வரை இருக்கும் என்று பூம் நிறுவனம் தெரிவித்துள்ளது.. இந்த விமானம் முற்றிலும் நிலையான விமான எரிபொருளில் பறக்கும், பெரும்பாலும் தாவரப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது,
65 முதல் 80 பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில் ஓவர்ச்சர் விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது.. இன்றைய அதிவேக வணிக விமானத்தை விட இரண்டு மடங்கு வேகத்தில் இது பறக்கும்.. அதாவது சுமார் 4,250 மைல் வேகத்தில் இது பறக்கும்.. வேகம், பாதுகாப்பு மற்றும் நிலைப்புத்தன்மைக்கு உகந்ததாக, ஓவர்ச்சூர் உலகம் முழுவதும் 600க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் பாதி நேரத்தில் பறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மியாமியில் இருந்து லண்டனுக்கு ஐந்து மணி நேரத்திற்குள் செல்லவும், லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து ஹொனலுலுவிற்கு மூன்று மணி நேரத்தில் செல்லவும் வகையில் புதிய சூப்பர் சோனிக் விமானங்கள் அறிமுகமாக உள்ளன..