ஜம்மா மிட்செல் என்ற (38 வயது) பெண் தனது தோழியை கொலை செய்து சூட்கேசில் உடலை அடைத்து லண்டன் தெருகளில் 2 மணி நேரங்கள் சுற்றி திரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த 2021 ஜூன் 27 இல் மாலை 5 மணிக்கு மி குயன் சூங் (வயது 67) என்ற பெண் கொலை செய்யப்பட்ட நிலையில் நீல நிற சூட்கேசில் அவரது தோழி இரண்டு மணி நேரங்கள் லண்டன் தெருக்களில் இழுத்துச் சென்றுள்ளார்.
சர்ச்சுக்கு சென்ற மூதாட்டியை கொலை செய்து தலை இல்லாத வெறும் உடலை மட்டும் 20 மைல்களுக்கு அப்பால் சென்று தூக்கி எறிந்து விட்டு, அவரது சொத்தை கைப்பற்றும் முயற்சியில் ஜம்மா மிட்செல் ஈடுபட்டுள்ளார்.
இவ்வாறு, ஜம்மா மிட்செல் நீல நிற சூட் கேசுடன் சுற்றித்திரிந்த காட்சிகள் சிசிடிவியில் இருந்து வெளியாகி பரவியது. பின்னர், அந்த சூட்கேஸ் வெகு தூரத்திற்கு அப்பால் கிடைப்பது கண்டறியப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில் மழுங்கிய ஆயுதத்தை கொண்டு அவரை தாக்கி இருப்பது தெரியவந்துள்ளது.
சில நாட்களுக்கு முன் இறந்த மூதாட்டியின் தலை அங்கிருக்கும் மரம் ஒன்றின் அடியில் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கில் போலீசார் ஜம்மா மிட்செல்லை விசாரித்த போது இந்த மரணத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறி வருகிறார். இதுவரை அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை என்பதால் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.