fbpx

பிரதமர் மோடிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்..! துணை முதல்வர் அதிரடி..! பரபரப்பு

டெல்லி மதுபான கொள்கை விவகாரத்தில் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் மதுபானங்கள் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டதில் முறைகேடு என குற்றம் சாட்டியும் டெல்லி அரசுக்கு புதிய கொள்கையினால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டதாகவும் இதில் அமைச்சர் உள்ளிட்ட பலருக்கும் தொடர்பு இருப்பதாக புகார்கள் எழுந்தது. இந்த விவகாரத்தில் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கிய நிலையில், டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. சோதனை முடிவில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த சிபிஐ, மணிஷ் சிசோடியா உள்ளிட்ட 13 பேரை குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்த்து இருந்தது.

பிரதமர் மோடிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்..! துணை முதல்வர் அதிரடி..!

இந்நிலையில், இன்று சிபிஐ சார்பில் டெல்லி துணை முதல்வருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், 13 பேரும் வெளிநாடுகள் உள்ளிட்டவற்றிற்கு செல்ல இயலாத வகையில் தடை உத்தரவும் இதனால் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மணிஷ் சிசோடியா, ”விலைவாசி ஏற்றம் வேலை வாய்ப்பின்மை உள்ளிட்டவற்றிற்கு தீர்வு காணும் தலைவரை நாடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கக்கூடிய சூழலில், பிரதமர் மோடி யாருக்கு எதிராக சிபிஐ-யை பயன்படுத்தலாம் என யோசித்துக் கொண்டிருக்கிறார். 2024ஆம் ஆண்டு பொதுமக்கள் இவர்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பார்கள்” என கடுமையாக சாடியுள்ளார்.

Chella

Next Post

மகனுக்காக உயிரை விட்ட தந்தை.. கேரளாவில் நடந்த பயங்கரம்.. வாலிபர்கள் வெறிச்செயல்..!

Sun Aug 21 , 2022
கேரள மாநிலம் கொச்சி அருகே ஆலங்காடு பகுதியில் வாழ்ந்து வருபவர் விமல் (54). இவரது மகன் ரோகித் (22). சம்பவத்தன்று இரவு 7 மணி அளவில் ரோகித் தனது வீட்டின் அருகே நின்று நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது இரண்டு வாலிபர்கள் குடிபோதையில் பைக்கில் அந்த வழியாக வந்தனர். அவர்கள் இருவரும் ரோகித் வீட்டின் அருகில் வந்த போது தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்தனர். இதை பார்த்த ரோகித் […]

You May Like